சேரன் செங்குட்டுவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
'''சேரன் செங்குட்டுவன்''' பண்டைத் தமிழகத்தின் முதன்மையான மூன்று அரச மரபுகளில் ஒன்றான [[சேரர்|சேர]] மரபைச் சேர்ந்த ஒரு புகழ் பெற்ற மன்னன் ஆவான். இவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் [[சேர நாடு|சேரநாட்டை]] ஆண்டதாகக் கருதப்படும் [[சேரலாதன்]] என்னும் மன்னனுக்கும், சோழன் மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன். பதிற்றுப்பத்து, பதிகம் இவனது தாயின் தந்தை பெயரை ஞாயிற்றுச் சோழன் எனச் [[சிலப்பதிகாரம்]] குறிப்பிடுகிறது. மணக்கிள்ளி என்பது இவன் தாயின் பெயர். இப் பெயர் 'சோழன் மணக்கிள்ளி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. <ref>சிலப்பதிகாரம், வஞ்சிக்காண்டம், வாழ்த்துக்காதை, உரைப்பாட்டு மடை 1</ref>. மணக்கிள்ளி என்னும் தாயின் பெயரை 'நற்சோணை' என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சேரநாடு மிகவும் வலிமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.
 
==பரணர் பாடிய பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து தரும் செய்திகள்==
;வெற்றிகள்
*தன்னை எதிர்த்த [[குட்டுவர்]]களை வென்றான். <ref>அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவர் மைந்துடை நல்லமர் கடந்து வலம் தரீஇ – பதிற்றுப்பத்து 42</ref>
*இமயம் குமரி எல்லைக்குட்பட்ட அரசர் பலரை வென்றான். <ref>வடதிசை எல்லை இமயம் ஆக, தென்னங்குமரி ஆயிடை அரசர்முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பு எழ சொல் பல நாட்டைத் தொல்கவின் அழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ – பதிற்றுப்பத்து 43</ref>
*[[அறுகை]] என்னும் தனட் நண்பனுக்காக மோகூர் மன்னன் காவல்மரம் வேம்பை வெட்டி, தோற்றவரின் மகளிர் களைந்த கூந்தலால் கயிறு திரித்து வெட்டிய வேப்பந்துண்டத்தை கட்டி யானை வரிசை கொண்டு தன் நாட்டுக்கு இழுத்துவந்து தனக்கு முரசு செய்துகொண்டான். <ref>பதிற்றுப்பத்து 44</ref> இந்தப் போரில் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து இவனைத் தாக்கியிருக்கிறார்கள். <ref>பதிற்றுப்பத்து 49</ref>
;வேனில் விழா
*[[காஞ்சி ஆறு|காஞ்சி ஆற்றுப் பொழிலில்]] சுற்றத்தாரோடு சேர்ந்து வேனில்விழா கொண்டாடினான். பதிற்றுப்பத்து 48
;தோற்றப்பொலிவு
*எழுமுடி மார்பின் எய்திய சேரல் <ref>பதிற்றுப்பத்து 45</ref>
*திண்தேர் ... நெடுந்தகை <ref>பதிற்றுப்பத்து 41</ref> என்பன இவனது தோற்றத்தைக் காட்டும் தொடர்கள்.
;பண்புகள்
*இவன் வணங்கிய தோற்றத்தோடு காணப்படுவான். வல்லமையிலோ யாருக்கும் தலைவணங்கமாட்டான். <ref>வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை பதிற்றுப்பத்து 48</ref>
;கொடை
*ஒவ்வொரு போரின் முடிவிலும் களிறுகளைப் பரிசாக நல்குவது இவன் வழக்கம். <ref>அட்டு ஆனானே குட்டுவன், அடுதொறும் பெற்று ஆனாரே பரிசிலர் களிறே - பதிற்றுப்பது 47</ref>
*விறலியர்க்குப் பிடியும், போர் வீரர்களுக்குக் களிறும், களம் வாழ்த்தும் அகவலர்களுக்குக் குதிரைகளும், துன்புறும் உருவர்க்கு உடனிருந்து உண்ணும் விருந்தும், சிரிப்பூட்டி மகிழச் செய்யும் ‘நகைவர்க்கு’ அணிகலன்களும் இவன் வழங்குவான். <ref>பதிற்றுப்பத்து 43</ref>
==பதிற்றுப்பத்து, ஐந்தாம் பத்து, பதிகத்தில் தொகுப்பாசிரியர் தரும் செய்திகள்==
*பதிகம் பரணரால் பாடப்பட்டது அன்று. [[எட்டுத்தொகை தொகுப்பு|பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர்]] பாடிச் சேர்த்த செய்தி.
"https://ta.wikipedia.org/wiki/சேரன்_செங்குட்டுவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது