மராத்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு விரிவாக்கம்
*விரிவாக்கம்*
வரிசை 28:
சாலிவாகனன் என்ர அரசன் இப்பேரரசை விரிவுபடுத்தினான். சாலிவாகன நாட்காட்டி இன்றும் இப்பகுதிகளில் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. மராத்தியின் முன்னைய பேச்சு வடிவம் இவர்கள் காலத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது. கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இராசுடிரகுடர்களும் ஆட்சி செய்தனர். பின்னர் யாதவ குலத்தினர் மராத்தி மொழியை ஆட்சி மொழியாக்கி ஆண்டதாகவும் கூறப்படுகிறது. தில்லி சுல்தான்களும் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளனர்.
 
பதினேழாம் நூற்றாண்டில் [[சிவாஜி (பேரரசர்)|பேரரசர் சிவாஜி]] மராத்தியப் பேரரசை நிறுவினார். வாழ்நாளில் பல போர்களில் போரிட்ட சிவாஜி 1680 ஆம் ஆண்டில் இறந்ததாக அறியப்படுகிறது. சிவாஜியின் ஆட்சியில் மகாராட்டிரத்தை இழந்த முகலாயர்கள் 1681 ஆம் ஆண்டு கைப்பற்றினர். சிவாஜியின் மகன் சம்பாஜி சிறு போரின் பின் பேரரசராக முடிசூட்டப்பெற்றார். ஆயினும், 1689 ஆம் ஆண்டில், அவுரங்கசீப்பினால் தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
 
பின்னர் ராசாராம் என்னும் இளவரசர் முடிசூட்டப்பட்டு தென்னிந்தியாவை நோக்கி போரிட்டார். மீண்டும் 1707 ஆம் ஆண்டு பேரரசி தாராபாய் போரிட்டு 27 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்றார் சிவாஜியின் பெயரன் சாகு, மராத்தியப் பேரரசை விரிவுபடுத்தினார்.
அவர் இறந்த பின் 1749 ஆம் ஆண்டில் பெசாவர்கள் ஆட்சியைப் பிடித்தனர். இதன் பின்னர் ஆட்சியிலமர்ந்த சிண்டே, போன்சுலே, ஓல்கர் ஆகியோர் இந்தியத் துணைக்கண்டத்தின் நடுப்பகுதி முழுவதையும் ஆண்டனர். புனே செல்வாக்கு மிக்க தலைநகராக விளங்கியது.
பின்னர் அகமது சா அபுதலியின் வெற்றியால் மராத்தியப் பேரரசு சிதறி சிறு சிறு நாடுகளானது. 1947 ஆம் ஆண்டு வரை நீடித்த இவ்வரசுகள் சிண்டே என்பவரின் முயற்சியால் இந்திய ஒன்றியத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு மகாராட்டிரம் என்றானது.
 
==இலக்கியம்==
யாதவ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தி மொழியே ஆட்சி மொழியாக விளங்கியது. யாதவ அரசனான சிங்கனா கொடை வழங்கிய பொருட்களைப் பற்றிய குறிப்புகள் கொல்காபூர்க் கோவிலில் உள்ளன. ஏமாத்திரி என்பவரின் எழுத்துகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. கொலாப மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டே மராத்திய மொழியின் பழங்காலக் கல்வெட்டாகும்.
கருநாட்டகத்தின் சிரவணபெலகொலாவில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டில் சிற்பி மற்றும் அரசர் பற்றிய குறிப்புகளும் காணக்கிடைக்கின்றன.
 
பழங்காலத்தினின்றே மராத்தியர் இலக்கிய மரபைக் கொண்டிருந்ததாக அறியப்படுகிறது. தியானேசுவர் என்னும் முனிவர் இலக்கியத்தை மக்களிடம் பரவச் செய்தார். இவரது படைப்பான தியானேசுவரி சிறந்த இலக்கியம் ஆகும். நாமதேவர் என்னும் முனிவரும் மராத்திய இலக்கியத்தை பரவச் செய்தார். இவர் மராத்திய கீக்கிய இலக்கியங்களை உருவாக்கியவர். பதினேழாம் நூற்றாண்டின் முக்தேசுவரரும், சமர்த்த தாசும், பதினெட்டாம் நூற்றாண்டின் வாமன பண்டிதரும் ரகுனாத பண்டிதரும், குறிப்பிடத்தக்கவர்கள். 1817 ஆம் ஆண்டில் மராத்திய நூலொன்று ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதாகவும், 1841 ஆம் ஆண்டில் மராத்திய நாளேடு துவங்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது. மராத்திய நாடகங்களும் இக்காலத்திலேயே சிறப்பாக அரங்கேறின. லோகமானிய திலகரும் தமது கேசரி என்ற இதழின் மூலம் இலக்கியப் பார்வைகளை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்கால மராத்திய பாடல்கள் சோதிபா பூலே என்பவரால் தொடங்கியவை. பிந்தைய கவிஞர்களான கேசவசுதா, பாலகவி, கோவிந்தராசா ஆகியோர் ஆங்கிலேயே இலக்கியத்தை அடியொற்றி தங்கள் கவிதைகளை எழுதியதாக அறியப்படுகிறது. தற்காலத்தில், எழுத்தாளர்கள் சிறுவர் நூல்கள், சிறுகதைகள், புதினங்கள் என எழுதுகின்றனர். விஷ்னு சகாராம் காண்டேகர் எழுதிய யயதி என்ற நூல் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்தது. சியாம் மனோகர், விசுராம் பெடேகர் ஆகியோர் நன்கறியப்பட்ட எழுத்தாளர்கள் ஆவர்.
யாதவ அரசர்களின் ஆட்சிக் காலத்தில் மராத்தி மொழியே ஆட்சி மொழியாக விளங்கியது. சிங்கனா என்ற யாதவ குல அரசன் கொடைகொடுத்த வளங்கள் மராத்தி மொழியில் கல்வெட்டுகளாக செதுக்கப்பட்டிருக்கின்றன. ஏமாத்திரி என்னும் கலைஞரின் படைப்புகளும் உள்ளன. குறிப்பிடத்தக்க அளவில் கிறித்தவ நூல்களும் எழுதப்பட்டுள்ளன.
 
இசுலாமிய, கிறித்த நூல்களும் மராத்திய மொழியில் எழுதப்பட்டுள்ளன. சாகிர் சேக் என்பரின் மராத்திய முசுலீம் எழுத்தாளர் இயக்கம் இசுலாமிய இளைஞர்களிடையே மராத்திய மொழியைக் கொண்டு சேர்க்கிறது. வில்லியம் கரே என்பார் விவிலியத்தை மராத்தி மொழியில் எழுதியவர். கிறித்தவ இயக்கங்களும் அறிவியல் அகரமுதலிகள், இலக்கண நூல்களை உருவாக்கின.
==சமயம்==
[[மராத்தி]] மொழி பேசும் மக்களில் பெரும்பான்மையினர் [[இந்து]]க்கள் ஆவர். விட்டலன் என்ற பெயரில் வணங்கப்படும் [[கண்ணன்|கண்ணனே]] பிரபலமான கடவுள் என்றாலும் [[சிவன்]], [[பார்வதி]], [[வினாயகர்|வினாயகரையும்]] வெவ்வேறு பெயர்களிலும், வடிவங்களிலும் வழிபடுகின்றனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், லோகமானிய திலகரால் துவங்கி வைக்கப்பட்ட விநாயகர் சதுர்த்தி பிரபலமான பண்டிகையாகும். மராத்தி இந்துக்கள் அனைத்து சாதி முனிவர்களையும் வணங்குவர்.
"https://ta.wikipedia.org/wiki/மராத்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது