நவராத்திரி நோன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Avatars of Amman Navarathiri.jpg|right|thumb|250px|நவராத்திரி ஒன்பதாம் நாளன்று துர்க்கை, இலக்குமி, சரசுவதியாக வேடமணிந்திருக்கும் சிறுமிகள்]]
'''நவராத்திரி நோன்பு''' (விரதம்) [[புரட்டாதி]] (புரட்டாசி) மாதத்தில் [[சூரியன்]] [[கன்னி இராசி]]யில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) [[நோன்பு|நோன்பாகும்]]. இது தட்சணாயண்தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயனதட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் [[புரட்டாதி]] மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.
 
==விரதகாலம்==
நவராத்திரி பூஜை [[புரட்டாதி]] மாதத்தில் [[அமாவாசை]] கழிந்த பூர்வபட்ச [[பிரதமை]] திதியில் ஆரம்பித்து [[நவமி]] முடியச் செய்யசெய்யப்பட வேண்டும் என்று [[காரணாகமம்]] கூறுகின்றது{{fact}}. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.
 
==ஐதீகம்==
மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)
 
வரி 12 ⟶ 14:
இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது [[சிவாகமம்|சிவாகமத்தின்]] உள்ளுறையாகும்.
 
==பூசை முறை==
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசை யன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்கவேண்டும். நறுமணமுள்ள சந்தனம், பூ (புஸ்பம்), இவைகளுடன் [[மாதுளை]], [[வாழை]], [[பலா]], [[மா]] முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், [[வடை]], [[பாயாஸம்]] முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். [[புனுகு]] கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.
 
"https://ta.wikipedia.org/wiki/நவராத்திரி_நோன்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது