கல்வெட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
கல்வெட்டியல் துறை 16 ஆம் நூற்றாண்டில் இருந்து உறுதியான வளர்ச்சி பெற்று வருகிறது. கல்வெட்டியலின் கொள்கைகள் பண்பாட்டுக்குப் பண்பாடு வேறுபட்டுள்ளன. ஐரோப்பியக் கல்வெட்டியல் தொடக்கத்தில், இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தியது. [[ஜார்ஜ் ஃபப்ரிசியஸ்]] (Georg Fabricius) - (1516–1571); [[ஆகஸ்ட் வில்ஹெல்ம் சம்ப்ட்]] (August Wilhelm Zumpt) - (1815–1877); [[தியோடோர் மாம்சென்]] (Theodor Mommsen) - (1817–1903); [[எமில் ஹியூப்னெர்]] (Emil Hübner) - (1834–1901); [[ஃபிரான்ஸ் ஹியூமொன்ட்]] (Franz Cumont) - (1868–1947); [[லூயிஸ் ராபர்ட்]] (Louis Robert) - (1904–1985) போன்றவர்கள் இத்துறையில் தனிப்பட்ட பங்களிப்புக்களைச் செய்துள்ளனர்.
 
மாம்சென்னினால் 1863 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டட, ''கோப்பஸ் இன்ஸ்கிரிப்ஷனம் லட்டினரம்'' என்னும் [[இலத்தீன்]] கல்வெட்டுக்கள் தொடர்பான தொகுப்பு, போர்க்கால இடையீடுகளைத் தவிர்த்து, இன்றுவரை [[பெர்லின்|பெர்லினில்] இருந்து வெளியிடப்பட்டு வருகிறது. இலத்தீன் கல்வெட்டுக்கள் தொடர்பிலான மிகப் பெரியதும், விரிவானதுமான தொகுப்பு இதுவேயாகும்.
 
கிரேக்கக் கல்வெட்டியல் தொடர்பான நடவடிக்கைகள் வேறொரு குழுவினால் எடுக்கப்பட்டன. 1825 தொடக்கம் 1877 வரையான காலப்பகுதியில், கோப்பஸ் இன்ஸ்கிரிப்ஷனம் கிரீசாரம் (Corpus Inscriptionum Graecarum) என்னும் தொகுப்பும் ஜெர்மனியிலிருந்தே வெளியிடப்பட்டது. பின்னர் வெளியிடப்பட்ட நவீன தொகுப்புக்களினால் இதைப் பலர் தற்போது பயன்படுத்துவதில்லை.
 
==குறிப்பிடத்தக்க கல்வெட்டுக்கள்==
 
* [[ரொசெட்டா கல்]]
* [[பெஹெஸ்ட்டன் கல்வெட்டு]]
* [[லகுனா செப்பேடு]]
* [[ஷுக்பாரோ வீட்டுக் கல்வெட்டு]]
* [[ஆபெர்சியஸ் கல்வெட்டு]]
* [[இஸ்லாத்துக்கு முற்பட்ட அரபிக் கல்வெட்டுக்கள்]]
* [[ஆர்க்கோன் கல்வெட்டு]]
* [[ஃபோரம் கல்வெட்டு]]
* [[டெயுவெனொஸ் கல்வெட்டு]]
* [[பிரிகென் கல்வெட்டு]]
* [[பிட்டோலா கல்வெட்டு]]
 
[[பகுப்பு:கல்வெட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கல்வெட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது