கா. ஸ்ரீ. ஸ்ரீ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
கா.ஸ்ரீ.ஸ்ரீ [[உத்தரப் பிரதேசம்|உத்திரப் பிரதேசத்தில்]] பிருந்தாவனம்என்ற ஊரில் 1913 ஆம் ஆண்டில் பிறந்தார். தந்தை ஸ்ரீரங்காச்சாரியார், தாய் ருக்குமணி அம்மாள் [[தமிழ்நாடு]], [[காஞ்சிபுரம்|காஞ்சிபுரத்தை]]ச் சேர்ந்தவர்கள். தந்தை இந்தி, தெலுங்கு, வங்க மொழிகள் அறிந்தவர், கா. ஸ்ரீ. ஸ்ரீ தந்தையிடம் சிறு வயதிலேயே வடமொழி காவியங்களயும், நாடகங்களையும், வைணவ நூல்களையும் பயின்று வந்தார். தந்தையார் [[பம்பாய்|பம்பாயில்]] லட்சுமி வெங்கடேசுவர அச்சகத்தில் பணியாற்றிய போது கா. ஸ்ரீ. ஸ்ரீ. வீட்டிலேயே தமிழ் படிக்கவும் எழுதவும் கற்றுக்கொண்டார். மராட்டிப் பள்ளியில் சேர்ந்து ‌ மராட்டியும் ஆங்கிலமும் பயின்றார்<ref name="kurinji">[http://muvalar.blogspot.com.au/2009/10/blog-post_8553.html தமிழகக் காண்டேகர் அறிஞர் கா. ஸ்ரீ. ஸ்ரீ.], முனைவர் மு. வளர்மதி</ref>.
 
இள வயதிலேயே சுகவீனமுற்றதால், [[சென்னை]]க்கு வந்து தாயின் ஆதரவில் பச்சயப்பன் உயர்நிலப்பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். காஞ்சிபுரத்தில் ஒரு வேதப்பண்டிதரிடம் வேதக் கல்வி பயின்றார். பள்ளிப் படிப்பை முடித்தும் 1930 ஆம் ஆண்டு இலட்சுமி அம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்கொண்டார்.
 
சென்னையில் இந்திப் பிரச்சார சபை அச்சகத்தில் பணியாற்ற ஆரம்பித்தார். சில மாதங்களில் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். நாள் தோறும் அச்சுக் கூட வேலை முடிந்ததும், [[பெரம்பூர் | பெரம்பூரில்]] இந்தி வகுப்பு நடத்துவார்<ref name="kurinji" />.
 
1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் [[மகாத்மா காந்தி]] சென்னை வந்தார். அப்போது, [[உ. வே. சாமிநாதையர்]] எழுதிய தமிழ் வரவேற்புரையை இந்தி மொழியாக்கம் செய்தார். இதன் மூலம் [[கலைமகள் (இதழ்)|கலைமகள்]] ஆசிரியர் [[கி. வா. ஜகன்னாதன்|கி. வா. ஜகன்னாதனின்]] அறிமுகம் கிடைத்தது. இதை தொடர்ந்து கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்ந்தார்<ref name="kurinji" />.
"https://ta.wikipedia.org/wiki/கா._ஸ்ரீ._ஸ்ரீ" இலிருந்து மீள்விக்கப்பட்டது