உடல் நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
interwiki links
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''உடல் திரவம்''' (Body fluid) என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] உள்ளே உருவாகும், அல்லது சுரக்கும் அல்லது கழிவாக வெளியேறும் [[நீர்மம்|நீர்மப்]] பதார்த்தங்களாகும். இந்த உடல் திரவத்தின் முக்கியமான பகுதி உடல் நீர் (body water) ஆகும். [[குருதி]], நிணநீர் (Lymph), [[சிறுநீர்]], [[விந்துப் பாய்மம்]], [[உமிழ்நீர்]], [[சளி]] (Sputum), [[கண்ணீர்]], [[பால்]] [[யோனி]]ச் சுரப்புக்கள் போன்ற அனைத்து நீர்ம வடிவிலான பதார்த்தங்களும் உடல் திரவங்களாக இருக்கின்றன. ஆனாலும், பொதுவாக [[மருத்துவம்|மருத்துவ]]ச் சோதனைகளில் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்படும் உடல் திரவங்களைக் குறிக்கவே இந்தச் சொல் பயன்படுத்தப்படுகின்றது.
 
இதில் கிட்டத்தட்ட 60-65 % உயிரணுக்களின் உள்ளாக [[அகஉயிரணுத் திரவம்]] (Intracellular fluid) ஆகவும், 30-35 % உயிரணுக்களுக்கு வெளியாக [[வெளிஉயிரணுத் திரவம்]] (Extracellular fluid) ஆகவும் காணப்படும். அகஉயிரணுத் திரவம் என்பது உயிரணுக்களின் உள்ளே உள்ள முதலுருவில் உள்ள நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும். வெளிஉயிரணுத் திரவமானது உயிரணுக்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளிலும், அனைத்து உடல் திரவங்களிலும் காணப்படும் நீர்மப் பதார்த்தத்தைக் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/உடல்_நீர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது