சங்கத்தமிழில் வட்டத்தின் சுற்றளவும் பரப்பளவும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
இதன்படி முறைசெய்தால் (2 * ((11 '''வி''') / 7)= 22/7 * '''வி'''. இதுவே தற்போது வழங்கப்பட்டுவரும் வட்டத்தின் சுற்றளவு ஆகும் '''πD''' ).
 
==எளிமைப்படுத்துதல்==
மேலே காக்கைப்பாடினியார் பாடியது துல்லியமான கண்குக்கு பொருந்தும். ஆனால் பொறியியலில் இவற்றை பயன்படுத்த இந்த அளவையும் எளிமையாக்கி கூறுகிறது [[கணக்கதிகாரம்]]. அப்பாடல்,
 
{{cquote|
"விட்ட மதனை விரைவா யிரட்டித்து
:மட்டு நான்மா வதினில் மாறியே - எட்டதினில்
ஏற்றியே செப்பிடி லேறும் வட்டத்தளவும்
:தோற்றுமெனப் பூங்கொடி நீ சொல்"
::::::::::::- [[கணக்கதிகாரம்]]
}]
 
இதன்படி,
# விட்ட மதனை விரைவா யிரட்டித்து = 2 * '''வி''' ஆகும்
# மட்டு நான்மா வதினில் மாறியே = 4 * 1/20 = 4/20 ஆகும்.
# எட்டதினில் ஏற்றியே = எட்டால் பெருக்க வேண்டும்.
 
இதன்படி,
 
2 * '''வி''' * 4/20 * 8 = (64/20) * '''வி''' = 3.2 '''வி''' ஆகும்.
 
==நடைமுறை==
வண்டித்தச்சர்கள் அச்சாணி செய்ய பயண்படுத்தப்படும் அளவையின் படி விட்டத்தை மூன்றால் பெருக்கி அதில் அரைக்கால் சேர்த்துக்கொள்கின்றனர்.
 
இதன்படி,
 
(3 + .125) * '''வி''' = 3.125 '''வி''' ஆகும்.
 
இவை அனைத்தையும் ஒப்புநோக்கினால் துல்லியக் கண்க்கிற்கும் நடைமுறை கணக்கிற்கும் தமிழர் பாகுபடுத்தி கணக்கியல் தந்ததனை அறிந்து கொள்ளலாம்.