"கருஞ்சீரகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,135 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| binomial_authority = [[கரோலசு லின்னேயசு|லி.]]
}}
'''கருஞ்சீரகம்''' (''Nigella sativa'') தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. ஹிந்தி மொழியில் இதற்கு கொலொஞி எனப் பெயர். இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.
 
[[பைபிள்|பைபிளிலும்]] குறிக்கப்பெற்றுள்ள இது, அரபு நாடுகளில் பெரிதும் உணவோடு பயன்படுத்தப் படுகிறது.
 
== இடம்பெற்றுள்ள சத்துக்கள் ==
இதின் விதையில் இடம்பெற்றுள்ள தைமோகுவினோன் வேறு எந்த தாவரத்திலும் இல்லாத ஒன்று. மேலும் அவசியமான அமினோ அமிலங்கள், அவசியான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் betaபீடா-caroteneகரோடின், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.
 
 
== மருத்துவ குணங்கள் ==
இதன் விதைகள் நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதயநோய் மற்றும் ஆஸ்துமா ஆகியவற்றையும் குணப்படுத்தக் கூடியதாக நம்பப்படுகிறது. கருஞ்சீரகத்தை வைத்தௌ நடத்தப்பட்ட ஆய்வுகள் அவை நோய் எதிர்பாற்றல் முறைமையை வலுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
 
கருஞ்சீரகம் சக்தி வாய்ந்த ஆண்டிஆக்ஸிடண்ட்(antioxidant) ஆகும். மற்றும் வீக்கம் தணிக்கும் (anti-inflammatory) குணத்தையும் கொண்டுள்ளது. இதனால் ஆஸ்துமா மற்றும் சுவாச ஒவ்வாமை நோய்களுக்கான தகுந்த எதிர்ப்பு சக்தியினைத் தருகிறது.
 
 
343

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1239931" இருந்து மீள்விக்கப்பட்டது