கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
நெகிழ்மக் கந்தகம் அல்லது காமாக் கந்தகம் [[இரப்பர்]] போன்ற தன்மையையும் ஒளி ஊடுருவிச் செல்லக் கூடிய தன்மையையும் கொண்டுள்ளது. கந்தகத்தை உயர் வெப்ப நிலைக்கு உருக்கி திடீரென்று குளிர் நீரில் குளிர்வித்து இதைப் பெறுகின்றார்கள். இதன் அடர்த்தி 1920 கிகி/கமீ. இது பிற கந்தக வேற்றுருக்களைப் போல கார்பன் டை சல்பைடில் கரைவதில்லை. நீண்ட நேர படு நிலைக்குப் பின் கந்தகம் ஒளிபுகாத, உடைந்து நொருங்கக் கூடிய வெளிர் மஞ்சள் நிறப் பொருளாக மாற்றமடைகின்றது. நெகிழ்மக் கந்தகம் கந்தகத்தின் உண்மையான வேற்றுரு இல்லை என்று சொல்வார்கள். படிக உருவமற்றவை(amorphous), மிதமக்கந்தகம்(colloidal) எனவும் கந்தகத்தை வேறுபடுத்தியுள்ளனர்.
 
== பயன்கள் ==
கந்தகம் துப்பாக்கி வெடி மருந்தாகவும், இயற்க்கை இரப்பரைக் கடினப்படுத்தும் வலி முறையில் ஒரு வேதிப் பொருளாகவும், புகைப் படலத்தை ஏற்படுத்தி போராட்டக் கும்பலைக் கலைக்கவும் பயன் படுகின்றது.
கந்தக அமிலம், சல்பேட் உரங்கள் தயாரிப்பில் கந்தகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. வறண்ட பழங்களை வெண்மையூட்டுவதற்கும், வானவேடிக்கைக்கான வெடி பொருட்களைத் தயாரிப்பதற்கும், தீக்குச்சிகளை உற்பத்தி செய்வதற்கும் பயன்படுகிறது.
 
கால்சியம் பை சல்பைட்டை மரக் கூழ்களை வெண்மையூட்டுவதற்குப் பயன்படுத்துகிறார்கள். பூஞ்சனம் படர்வதை கந்தகம் மட்டுப்படுத்துகிறது. அதனால் மருந்து தயாரிக்கும் வழி முறையில் இது பெரிதும் நன்மை பயக்கிறது.
 
மரத்தாலான பொருட்களைப் பாதுகாக்க மலிவான சாயங்களை கந்தகத்தைக் கொண்டு தயாரித்து பயன்படுத்துகிறார்கள்.
 
கந்தகம் உயிர்ப் பொருட்களின் வளர்ச்சிக்குத் தேவையானதாக உள்ளது. ஒவ்வொரு உயிர்ச் செல்லிலும் குறிப்பாக [[தோல்]], [[நகம்]] மற்றும் முடிகளில் கந்தகம் உள்ளது சைஸ்டைன்(cysteine)மற்றும் மெத்தியோனைன்(Methionine)போன்ற கந்தகம் அடங்கிய அமினோ அமிலங்கள் மூலமாக புரத உணவுப் பொருட்களிலிருந்து கந்தகத்தை உடல் பெறுகிறது.
 
பி வைட்டமின்களில் (தையாமின், பண்டோதினிக் மற்றும் பயோடின்) கந்தகம் உள்ளடங்கி இருக்கிறது. [[வெங்காயம்]], வெள்ளைப் பூண்டில் கந்தகம் ஓரளவு அடங்கி இருக்கிறது.
 
கந்தகத்தின் முக்கியமானதொரு வர்த்தகப் பயன் இரப்பரை வலுவூட்டலாகும் (vulcanization ). [[இரப்பர்]] மூலக்கூறுகள் கந்தக அணுக்களைக் கவரும் தன்மை கொண்டன. இரப்பரின் கடினத் தன்மை அதில் சேர்க்கப்படும் கந்தகத்தின் அளவைப் பொறுத்தது. கூடுதல் வலிமையுடைய இரப்பர் மீள்திறன் மிக்கதாக இருப்பதால் [[பேருந்து]], [[மகிழுந்து]], [[விமானம்]], இராணுவ வண்டிகள், கனரக வண்டிகள் இவற்றிற்கான [[சக்கரம்|சக்கரங்கள்]] செய்யப் பயன்படுகிறது .
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது