தஞ்சாவூர் ஓவியப் பாணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Gajalakshmi in Tanjore Painting .png|thumb|250px|தேவிக்கு வெண்மை நிறமும், தூண்கள் தங்க வேலைப்பாடுடனும், கற்கள் பதிக்கப்பட்டும், ஓவியத்தின் சில பகுதிகள் புடைப்பாகவும், திரைச்சீலையுடனும் காணப்படும் தஞ்சாவூர் ஓவியப்பாணியில் வரையப்பட்ட கஜலட்சுமி ஓவியம். .]]
[[Image:Sikh Gurus with Bhai Bala and Bhai Mardana.jpg|thumb|250px|[[குருநானக்]]கும் சீடர்களும், ஓர் அரிய தஞ்சாவூர் பாணி ஓவியம்]]
'''தஞ்சாவூர் ஓவியப் பாணி''' என்பது [[தஞ்சை நாயக்கர்]] காலம் தொட்டு, [[தஞ்சை மராட்டியர்]] மற்றும் [[ஆங்கிலேயர்]] ஆட்சிக் காலங்களினூடாகத் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] வளர்ச்சியடைந்து வந்த ஓர் [[தமிழ்நாட்டு ஓவியக் கலை|ஓவியக் கலைப் பாணி]] ஆகும். பல்வேறுபட்ட காலகட்டங்களின் ஊடாக வளர்ந்து வந்த இப்பாணி, நாயக்கர்களினூடாக [[ஆந்திரா|ஆந்திர]]க் கலைப் பாணியினதும், [[மராட்டி]]யர்களினூடாக மராட்டிய மற்றும் [[முகலாய ஓவியப் பாணி]]யினதும், ஆங்கிலேயரினூடாக மேனாட்டுக் கலைப் பாணியினதும் தாக்கங்களைப் பெற்றது.
வரி 31 ⟶ 32:
 
கொதிக்கவைக்காத சுண்ணாம்புப் பொடியை பசையுடன் கலந்து பிசைந்து, கித்தான் பரப்பில் தேர்ந்தெடுத்த பகுதிகளில் சீராகப் பூசிச் சிறிதுபோல புடைக்கச் செய்வார்கள். வெட்டிய கண்ணாடித் துண்டுகள், விலை உயர்ந்த கற்கள் அந்தப் பரப்பில் பதிக்கப்படும். அவற்றைச் சுற்றி கலவையை திரும்பவும் பூசி திடப்படுத்துவார்கள். தங்கம் வெள்ளி தகடுகளையோ காகிதங்களையோ வெட்டி வடிவங்களாக்கி ஒட்டுவார்கள். அணிகலன்கள், ஆடைகள் போன்றவற்றில் இவை இடம் பெறும். இதன் பின்னர்தான் வண்ணம் தீட்டுவது தொடங்கும். வண்ணம் தீட்ட இயற்கை வண்ணங்களே பயன்பட்டன. ஓவியம் முடிந்தபின் அதற்கு பளபளப்பான பூச்சு கொடுத்து, சட்டம் கட்டுவார்கள்.
[[File:Tanjore paintings being sold at Dilli Haat.JPG|thumb|250px|நவீன தஞ்சாவூர் ஓவியங்கள் விற்கும் கடை.]]
 
== தற்கால நிலை ==
தற்காலத்தில் இந்த ஓவியப் பாணி அனைவருக்குமானதாகி விட்டது. ஓவியத்தில் உருவமோ, வண்ணங்களின் கோர்வையோ மாறுவதில்லை. கித்தானும் நவீன வண்ணங்களும் மரபை ஒதுக்கி இடம் பிடித்துக் கொண்டு விட்டன. தங்ஜாவூர் பாணி வரையும் ஓவியக் குடும்பங்களும் இப்போது இல்லை. எனவே நேர்த்தியில்லாத கொச்சைப்படுத்தப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் உலகெங்கும் காணக் கிடைக்கின்றன.<ref name="அரவக்கோன்"/> பழைய தஞ்சை ஓவியத் தொகுப்புகள் கடவுள் உருவங்களை வரைவதோடு நின்றுவிட்டன. ஆனால் இன்றைய காலத்தில் நவீன கலைஞர்கள் புதிய பரிமாணங்களை வெளிக்காட்டுகிறார்கள். அவர்களும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஆட்சி செய்யும் கடவுள்களை வரைந்து காட்டத் தொடங்கியுள்ளனர்.<ref name="ஜவுளித்துறை அமைச்சகம்"/>
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்_ஓவியப்_பாணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது