அகப்பொருள் தலைவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
குடும்பத் தலைவன், சமூகத் தலைவன், அரசியல் தலைவன், அரசன், அவைத் தலைவன் ஆகியோரை நாம் அறிவோம். இவர்கள் இக்காலத்திலும் கொள்ளப்படும் வாழ்வியல் மாந்தர்கள். இலக்கியங்களில் [[பாட்டுடைத் தலைவன்]] எனப்படும் கதை அல்லது வரலாற்று மனிதனும் உண்டு. இவர்கள் எல்லாரும் [[புறத்திணை]] மாந்தர்கள். இவர்கள் வாழ்வியல் மாந்தர்களாயின் ‘திரு’ என்னும் அடைமொழியுடன் குறிப்பிடப்படும். இலக்கியத் தலைவனாயின் அவனது பெயர் அவனது இயற்பெயராலும், பண்புப் பெயராலும், அன்மொழித்தொகைப் பெயராலும் குறிப்பிடப்படும். எப்படியோ புறத்திணையில் வரும் தலைவன் பெயர் அவனை மட்டும் உணர்த்தும் வகையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
 
[[அகத்திணை]]யில் தலைவன் என்னும் சொல் தனிப்பட்ட ஒருவனை உணர்த்தாது. [[தொல்காப்பியம், களவிவியல்களவியல் செய்திகள்|காதல் வாழ்க்கையில்]] காதலனாகவும், [[தொல்காப்பியம், கற்பியல் செய்திகள்|இல்லற வாழ்க்கையில்]] கணவனாகவும் வாழும் எவனையும் குறிக்கும். தமிழ் இலக்கண இலக்கியங்கள் இவனைப்பற்றிக் கூறும் செய்திகள் தமிழரின் வாழ்க்கையைப் புலப்படுத்துகின்றன.
 
இந்த அகத்திணைத் தலைவனின் பங்கு இன்னதெனத் [[தொல்காப்பியம்]] தொகுத்துக் காட்டுகிறது.
வரிசை 20:
பரத்தையிடம் சென்று திரும்பி, தலைவியின் ஊடலைத் தணிக்கக் கெஞ்சுவான்.
 
==[[தொல்காப்பியம் களவியல் செய்திகள்|காதல் வாழ்க்கையில்]] <ref>தொல்காப்பியம் களவியல் 9-12</ref>==
வேட்கை, காதலியிடம் பேச்சுக்கொடுத்தல், அவளைத் தொட்டுப் பயிற்றுவித்தல், இடம் பெற்றுத் தழுவுதல், தோழியின் துணையைப் பெற்றுக் கூடுதல், மடலேறுதல் பற்றிக் கூறுதல் முதலானவை காதல் வாழ்க்கையில் நிகழும்.
==[[தொல்காப்பியம் கற்பியல் செய்திகள்|கற்பு வாழ்க்கையில்]] <ref>தொல்காப்பியம் கற்பியல் 5</ref>==
கற்பு வாழ்க்கைக் காலத்தில் எப்போதெல்லாம் தலைவன் பேசுவான் என்னும் செய்தி தொல்காப்பியத்தில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
:முதலிரவு புணர்ச்சியின்போது
"https://ta.wikipedia.org/wiki/அகப்பொருள்_தலைவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது