வாஸ்கோ ட காமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 34:
 
ஆனால் பார்த்தலோமியா டயாஸ் கண்டறிந்த வழித்தடத்திற்கும் மேற்குறிப்பிட்ட இருவர் கண்டறிந்த வழித்தடத்திற்கும் இடையிலிருந்த தொடர்பை [[இந்தியப் பெருங்கடல்]] வழியே கண்டறிவதிலேயே அனைவரும் முனைப்புடன் இருந்தனர். அப்பணியானது உண்மையில் வாஸ்கோ ட காமாவின் தந்தைக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் மானுவெல் I இப்பணியை வாஸ்கோ ட காமாவிற்கு வழங்கினார். இதனை அவர் ஆப்பிரிக்காவின் தங்கக் கடற்கரையில் போர்ச்சுக்கீசிய வர்த்தக மையங்களை ஃப்ரெஞ்சுக் காரர்களிடமிருந்துக் காப்பதில் காமாவின் சிறந்த பணியைக் கருத்தில் கொண்டு வழங்கினார்.
 
== வாஸ்கோ ட காமாவின் முதல் இந்தியப் பயணம் ==
1483 இல், டீகோ காவோ போர்ச்சுகலில் இருந்து ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு வரை கடலில் பயணம் செய்து வந்தடைந்தது; அதற்கு ஐந்தாண்டுகளுக்குப் பின் பார்டோலொமு டயஸ் ஆப்ரிக்க கண்டத்தை கடல் வழியே கடந்து, இந்தியப் பெருங்கடலை எட்டிப் பார்த்தது. ஒரு கதைப் படி, ஆப்ரிக்காவின் தொன்கோடி முனைக்கு "நன்நம்பிக்கை முனை" எனப் பெயர் வைத்தது - டயஸ் தான் என்பார்கள். (அதே இடத்திற்கு திரும்பவும் வந்து, பின் அங்கிருந்து இந்தியாவை அடையும் பயணத்தை துவக்கிடலாம் என்ற நம்பிக்கையில்). பின்னர் இன்னொரு பயணத்தில் அவர் இறந்து விட்டதால், அந்த பொறுப்பு வாஸ்கோ ட காமாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நன்நம்பிக்கை முனையை 1497 இல் அடைந்தார் வாஸ்கோ ட காமா. பின்னர் அங்கிருந்து, ஆப்ரிக்காவின் கிழக்கு கரையோரமாகவே மூன்று இடங்களில் நிறுத்திய பின்னர், நான்காவது இடமாக, கிழக்கு ஆப்ரிக்காவில் மலிந்தியை (தற்போதைய கென்யா) அடைந்தார்.
 
மலிந்தியில், இந்தியப் பெருங்கடலின் அறிவுச்சுரங்கமாக - அதன் [[காற்றையும்|வணிகக் காற்று]], அதன் வீச்சையும் நன்கறிந்த மாலுமி - அஹ்மத் இபின் மஜித்தின் துணையைப் பெறுகிறார் வாஸ்கோடகாமா. 1498 இல், அந்தத் துணையுடன் ஆப்ரிக்காவில் இருந்து புறப்பட்ட அவரது கப்பல்கள் 23 நாட்களிலேயே இந்தியாவின் மலபார் கடற்கரையைத் தொட்டுவிட்டது. அப்போது வீசிய தென்மேற்கு பருவக்காற்றாலே தான் அவ்வளவு துரிதம் சாத்தியமாயிற்று. வாஸ்கோடகாமா திரும்பிச் சென்றபோது, காற்றின் எதிர் திசையில் பயணித்ததால், அதே தூரத்தைக் கடக்க, நான்கு மாதங்கள் ஆகின. இப்படியாக, இந்தியாவிற்கான இன்னொரு மார்கத்தினை சாத்தியப்படுத்திக் காட்டினார் காமா. குறிப்பாக அரபு நாடுகள் வழியாக தரை வழி மார்க்கமானது அரசியல் காரணாங்களால் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளான ஒன்றாக இருந்ததால், கடல் மார்க்கமான, அதிலும் அன்னியர்களால் அதிகம் பயன்படுத்தப்படாத இந்தியப் பெருங்கடல் வழி மார்க்கமானது, சிறப்பானதொரு மாற்று என்ற ஒரு நம்பிக்கையை வழங்கியது.
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/வாஸ்கோ_ட_காமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது