சுடுமண் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சுடுமண் சிற்பங்கள்''' என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 4:
 
== தொன்மையான சுடுமண் பொருள்கள் ==
தமிழகத்தில் தொல்லியல் துறையினரால் பல இடங்களில் அகழ்வாய்வு செய்யப்பட்டு பல சுடுமண் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மனித உருவங்கள், விலங்குகளின் உருவங்கள், விளையாட்டுப் பொருள்கள், பொம்மைகள், இலிங்கங்கள், காதணிகள், நூற்புக் கருவிகள், வளையங்கள், மட்பாண்டங்கள், சமையற் கருவிகள், உருளைகள் போன்றவை அகழ்வாய்வில் கிடைத்துள்ளன. இவற்றில் கலை நுட்பங்களும் காணப்படுகின்றன. இவை கைத்திறனால் செய்யப் பட்டவையாக உள்ளன. திருக்காம்புலியூரில் கண்டெடுக்கப் பட்ட ஒரு சிலையின் சிகை அலங்காரம் காந்தாரக் கலையை நினைவூட்டுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகில் கிடைத்துள்ள புத்தரது சுடுமண் சிற்பத்திலும் இதே போன்று சுருள்முடி அமைப்புக் காணப்படுகின்றது. இது ஏறத் தாழ 8-9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உள்ளது. அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
=== காஞ்சிபுரம் ===
காஞ்சிபுரத்தில் சில சுடுமண் பாவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்கள் யாவும் பெரும்பாலும் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சுடுமண் பொம்மைகள் மற்றும் சுடுமண்ணாலான யானைத் தலை ஆகியன உள்ளன.
 
=== கோயம்புத்தூர் மாவட்டம் ===
அகழ்வாய்வில் பல காலத்தைச் சேர்ந்த சுடுமண் பாவைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. காஞ்சிபுரத்தில் சில சுடுமண் பாவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிற்பங்கள் யாவும் பெரும்பாலும் சங்க காலத்தைச் சேர்ந்தவை என்று தெரிகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் போளுவாம்பட்டி என்ற இடத்தில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இங்குக் கி.பி. 5-6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இயக்கன் என்னும் சிறு தெய்வத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்திலேயே அகழ்வாய்வில் சுடுமண் பொம்மைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளது இவ்வூரில்தான். தர்மபுரி மாவட்டத்தில் குசானர் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை) கலையோடு தொடர்புடைய சிற்பம் கிடைத்துள்ளது. 12-13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பங்களும் கோவை மாவட்டத்தில் கிடைத்துள்ளன.
 
=== தர்மபுரி மாவட்டம் ===
தர்மபுரி மாவட்டத்தில் குசானர் (கி.பி. 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை) கலையோடு தொடர்புடைய சிற்பம் கிடைத்துள்ளது.
=== இராமநாதபுரம் மாவட்டம் ===
இராமநாதபுரம் மாவட்டம் கொந்தகை என்ற இடத்தில் 14 - 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுடுமண் சிற்பங்கள் உள்ளன.
 
=== தஞ்சாவூர் ===
தஞ்சாவூருக்கு அருகில் இராஜாளி விடுதி என்ற இடத்தில் நாயக்கர் கால மண்பாவைகள் கிடைத்துள்ளன.
மிக அண்மையில் தமிழகத் தொல்லியல் துறையினரால் திருத்தங்கலில் நடைபெற்ற அகழ்வாய்வில் ஸ்ரீவத்ஸம் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் செங்கல் கிடைத்துள்ளது. இது சங்க காலத்தினைச் சேர்ந்ததாகும்.
 
=== வடஆர்க்காடு மாவட்டம் ===
வடஆர்க்காடு மாவட்டம் பையம் பள்ளியில் சுடுமண் பொம்மைகளும், சுடுமண் விளக்குகளும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.
 
=== திருச்சி ===
திருச்சிக்கு அருகில் உறையூரில் நடந்த அகழ்வாய்வில் உடைந்த சுடுமண் பொம்மைகள் பலவும் கிடைத்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மனித உருவங்களாகும், தர்மபுரி மாவட்டம் குட்டூரில் நடத்திய அகழ்வாய்வில் சுடு மண்ணாலான விலங்குகளின் உருவங்கள், பெண்ணின் தலை, பகடைக் காய்கள், புகைக் குழல்கள் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. காவிரிப் பூம்பட்டின அகழ்வாய்வில் தலைப்பாகையுடன் கூடிய மனித உருவங்கள் கிடைத்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சுடுமண்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது