சுடுமண் சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திருச்சி: (edited with ProveIt)
வரிசை 40:
 
 
 
 
=== பைரவர் சிற்பம் ===
சில ஊர்களில் சிவபெருமானின் பைரவ உருவமும் சுடுமண்ணால் செய்து வைக்கப் பட்டுள்ளது. பைரவர் கிராமக் காவல் தெய்வமாகவே கருதப்படுகிறார். திண்டிவனத்திற்குக் கிழக்கே எட்டுக் கிலோ மீட்டர் தொலைவில் அய்யனார் கோயில் ஒன்றுள்ளது. அதற்கருகில் பைரவர் உருவம் வைக்கப் பட்டுள்ளது. இது சுடுமண்ணாலான மிகப் பெரிய உருவமாகும்.
 
=== மதுரை வீரன் ===
இது கிராம தேவதையாகும். பல ஊர்களில் இவருக்குக் கோயில் கட்டப்பட்டுள்ளது. இவரது உருவம் சுடுமண்ணால் செய்யப்படுவது வழக்கம். தஞ்சாவூரில் குதிரை மீதமர்ந்துள்ள மதுரை வீரன் சிலை உள்ளது.
 
=== ஏழு கன்னிமார்கள் ===
சகோதரிகள், தாய்மார்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கன்னிமார்களுடன் இரண்டு ஆண் கடவுளரும் செய்து வைக்கப்படுவது மரபு. அவர்கள் பொதுவாக ''[[சப்த கன்னிகள்]]'' என்றும் ''ஆகாச கன்னிகள்'' என்றும் ''[[கன்னிமார்கள்]]'' என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் குளக்கரைகளில் அமைக்கப்படுவர். மதுரைக்கு அருகில் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள விரகனூரில் இக்கன்னிமார்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. இக்கன்னிமார்களே பிற்காலத்தில் கோயில்களில் சப்த மாதர்கள் என்ற பெயரில் இடம் பெற்றனர். கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினத்தில் மீனாட்சி கோயில் உள்ளது. அங்கு சப்த கன்னிகளின் சுடுமண் சிலைகள் உள்ளன. வடஆர்க்காடு மாவட்டத்தில் இக்கன்னிகளின் சிலைகள் கிடைக்கின்றன.
 
=== மாரியம்மன் ===
தமிழ்நாட்டுக் கிராம தேவதைகளில் ஒன்று மாரியம்மன் ஆகும். இது [[அம்மை]], [[காலரா]], [[காய்ச்சல்]] போன்ற வேனிற்காலத்து நோய்களைத் தீர்க்கும் தாய்த் தெய்வமாக நம்பப்படுகிறது. இத்தேவியின் அருளைப் பெற ஆண்டு தோறும் சித்திரை - வைகாசி மாதங்களில் கிராமங்களில் திருவிழாக் கொண்டாடுவர். மட்பாண்டஞ் செய்வோர் இத்தேவியின் உருவங்களைச் சுடுமண்ணால் செய்து கொடுப்பர். இத்தெய்வம் ''கிராம தேவதை'' என்று போற்றப் படுகிறது. திருவிழாக் காலங்களில் மிருக பலி நடைபெறும். இது போன்றே காளியம்மன், முத்தாலம்மன் திருவிழாக்களும் கிராமங்களில் நடைபெறும். திருவிழா முடிந்ததும் சுடுமண் உருவங்கள் அகற்றப்படும்.
 
=== பூதங்கள் ===
பூதவழிபாடு குறித்து சிலப்பதிகாரத்தில் சொல்லப் பட்டிருக்கின்றது. பூதங்களைக் காவல் தெய்வங்களாகவும், சத்திய வாக்குகளைக் காக்கும் கடவுளாகவும் வணங்குவர்.சதுக்க பூதம் என்று சிலப்பதிகாரம் இவற்றை அழைக்கிறது. இப்பூதங்களின் உருவங்கள் சுடு மண்ணால் செய்யப் பட்டவையாகும். இம்மாவட்டத்தில் உள்ள ஆறுமுக மங்கலம் என்ற ஊரில் பூத வழிபாடும், மாடன்(மாடசாமி, சுடலைமாட சாமி)வழிபாடும் இன்றும் சிறப்பாக நடைபெறுன்றன. ஈரோடு மாவட்டத்தில் அண்ணன்மார் கோயில்கள் உள்ளன. அவற்றிலும் சுடுமண் சிற்பங்கள் வைக்கப் பட்டுள்ளன. தென்ஆர்க்காடு மாவட்டத்தில் கன்னியம்மன் என்னும் கிராம தேவதைக்குக் கட்டப் பட்டுள்ள கோயிலில் ஏழு சகோதரர்களின் சுடுமண் சிற்பங்கள் உள்ளன. திருநெல்வேலி மாவட்டப் பகுதியில் பூத வழிபாடு அதிகம் உள்ளது.
 
=== கருப்பணசாமி ===
அய்யனார் கோயில்களில் துணைக் கோயிலாகவும் மற்றும் தனிக் கோயிலாகவும் கருப்பணசாமி வழிபாடு நடந்து வருகிறது. இவர் கிராம தேவதைகளின் காவல் தெய்வம் என்பர். இவரது சிற்பங்களும் பல இடங்களில் சுடுமண்ணால் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப் பட்டுள்ளன. இதனை மதுரைக்கு அருகே கீழக் குயில்குடியிலும், செக்கானூரணியிலும், கோச்சடையிலும், சங்கராபுரத்திலும் பிற இடங்களிலும் காணலாம்.
 
=== நேர்த்திக் கடன் உருவங்கள் ===
பல கிராமக் கோயில்களில் நேர்த்திக் கடனைச் செலுத்தும் பொருட்டுச் சுடுமண் உருவங்கள் செய்து வைப்பது மரபு. [[குதிரை]], [[யானை]] போன்றவை பல கோயில்களில் இடம் பெற்றுள்ளன. குழந்தை வரம் வேண்டுபவர்கள் சுடுமண்ணால் தொட்டிலும் குழந்தையும் செய்து வைப்பர். கை, கால் சுகம் வேண்டுவோர் உடல் உறுப்புகளைச் செய்து வைப்பர். இதனை மடப்புரம், திருப்பாச்சேத்தி, கோச்சடை போன்ற இடங்களில் காணலாம். சேலத்திற்கு அருகில் சேசஞ்சாவாடி என்ற இடத்தில் நாகர் உருவங்கள் செய்து வைக்கப் பட்டுள்ளன. இங்குள்ள நாகர் சிற்பங்கள் பெரும்பாலும் சுடுமண்ணால் செய்விக்கப் பட்டவையாகும். இதுபோன்று பல கிராமக் கோயில்களிலும் காண முடிகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சுடுமண்_சிற்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது