343
தொகுப்புகள்
'''கருஞ்சீரகம்''' (''Nigella sativa'') தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவினைத் தாயகமாகக் கொண்ட தாவரம். இச்செடி 20 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரும். மலர்கள் நீண்ட காம்புகளுடன் வெளிர் நீல நிறத்தில் இருக்கும். கனியின் மேற்பகுதி பிளவுற்று விதைகள் வெளியாகும். ஒரு காயில் பல விதைகள் அடங்கியிருக்கும். இவை கறுப்பாகவும், உறுதியாகவும் இருக்கும். இதன் விதைகள் நறுமண உணவுப் பொருளாகப் பயன்படுகின்றன. இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. ஹிந்தி மொழியில் இதற்கு கொலொஞி எனப் பெயர். இதை சாப்பிட்ட உடன் தொண்டையில் ஒரு விதமான அரிப்புணர்வை சில நிமிடங்களுக்கு ஏற்படுத்துகிறது.
"இறப்பைத்தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக் கூடியது கருஞ்சீரகம்" என்று [[இசுலாம்]] மதத்தின் நிறுவனரான [[முகமது நபி|நபிகள் நாயகம்]] அவர்களது வாக்காகக் கருதப்படுகிறது. யுனானி மருத்துவத்தில்
[[பைபிள்|பைபிளிலும்]] குறிக்கப்பெற்றுள்ள இது, அரபு நாடுகளில் பெரிதும் உணவோடு பயன்படுத்தப் படுகிறது.
|
தொகுப்புகள்