அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Entrance to the National Library of Medicine, October 9, 20..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:52, 28 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (United States National Library of Medicine) (குறுக்கம்: NLM) அமெரிக்க அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றது. இந்நூலகம், உலகத்தில் உள்ள மருத்துவ நூலகங்களிலேயே மிகப்பெரியதாகும்[1]. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள தேசிய நல கழகத்தின் ஒரு பிரிவான இந்நூலகம் மேரிலாந்து (மேரிலன்ட்) மாநிலத்திலுள்ள பெதெஸ்தாவில் உள்ளது. இங்கு மருத்துவம் மற்றும் அறிவியல் தொடர்பான, உலகத்தின் மிகப்பழைய, அரிதாக உள்ளவற்றையும் சேர்த்து, ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட புத்தகங்களும், அறிவியல் ஆய்விதழ்களும், தொழில்நுட்ப அறிக்கைகளும், கையெழுத்துப்படிகளும், நுண்படச்சுருள்களும் (microfilms), புகைப்படங்களும், படிமங்களும் உள்ளன.

நூலக நுழைவாயில்
முக்கிய படிக்கும் அறை
இலச்சினை
அலுவலக முத்திரை

1984 - ஆம் ஆண்டிலிருந்து தற்சமயம்வரை இந்நூலகத்தின் நிருவாகியாக இருப்பவர் டொனால்ட் லிண்ட்பெர்க் ஆவார்[2].

மேற்கோள்கள்

  1. DeBakey ME (1991). "The National Library of Medicine. Evolution of a premier information center". JAMA 266 (9): 1252–8. doi:10.1001/jama.266.9.1252. பப்மெட்:1870251. 
  2. Director, NLM

வெளியிணைப்புகள்