விகடன் குழுமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
[[சக்தி விகடன்]] - சக்தி விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ஆன்மீக இதழாகும். வாசல், ஸ்தல வழிபாடு, இளைஞர் சக்தி, சிறப்புக் கட்டுரை, தொடர்கள், சிறுகதை போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. ஆலயங்களின் சிறப்புகள், ஆன்மீக பயண கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் போன்றவையும் உள்ளன.
===நாணயம் விகடன்===
[[நாணயம் விகடன்]] - நாணயம் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொருளாதார இதழாகும். வாசல், நாணயம் ஸ்பெஷல், ஆசிரியர் பக்கம், நடப்பு, பங்குச் சந்தை, கமாடிட்டி, சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட், தொடர்கள், கேள்வி-பதில் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களின் மூன்றெழுத்து மந்திரம் MBA என்ற தொடர் தற்போது இந்த இதழில் வெளிவருகிறது.
[[நாணயம் விகடன்]] - பொருளாதாரச் செய்திகளுக்கான இதழ்
===மோட்டார் விகடன்===
[[மோட்டார் விகடன்]] - மோட்டார் விகடன் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் வாகன அமைப்புகள், மற்றும் செயற்பாடுகள் குறித்த செய்திகள் வழங்கும் இதழாகும். ஸ்பெஷல், கார்ஸ், பைக்ஸ், தொடர்கள், ரேஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வாகனங்கள் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் புதிய ரக வாகனங்கள் பற்றிய கட்டுரைகளும் இணைக்கப்படுகின்றன. மோட்டார் கிளினிக், மோட்டார் நியூஸ், நெட்டகாசம் போன்ற தொடர்கள் பிரபல்யமானவை.
வரிசை 42:
[[பசுமை விகடன்]] - பசுமை விகடன் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் செய்திகளுக்கான இதழாகும். மகசூல், சிறப்பு கட்டுரை, நாட்டு நடப்பு, தொடர்கள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வேளாண்மை சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் சுற்றுச் சூழல் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், வேளாண் வல்லுனர்களின் குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன.
===டாக்டர் விகடன்===
[[டாக்டர் விகடன்]] - டாக்டர் விகடன் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் மருத்துவ இதழ்இதழாகும்.
ஃபிட்னஸ், ஸ்பெஷல், டாக்டர் கைடன்ஸ், டயட் டைம்ஸ், தொடர், ட்ரீட்மென்ட்ஸ், மாற்று மருத்துவம், கன்சல்டிங் ரூம், டிடெயில் டிப்ஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. மருத்துவம் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் நடைமுறை நோய்கள் பற்றி விழிப்புணர்வு கட்டுரைகளும், பிரபலங்களின் மருத்துவ குறிப்புகளும் இணைக்கப்படுகின்றன.
===டைம் பாஸ்===
[[டைம் பாஸ் (இதழ்)|டைம் பாஸ்]] - டைம் பாஸ் இதழ் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொழுதுப்போக்கு இதழாகும். சினிமால். அரசியல், போட்டோ கமென்ட், கண்டுபிடி, ஜோக், கிசுகிசு, அலசி ஆராய்வது அப்பாடக்கர் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. திரைப்படம் மற்றும் அரசியல் தொடர்பான சுவையான செய்திகளைக் கேலியாகக் கூறும் இதழாக வெளிவருகிறது.
 
==சிறப்பு மலர்கள்==
தீபாவளி போன்ற விழாக்காலங்களில் சிறப்பு மலர்கள் வெளியிடப்படுகின்றன. தடிமனான அட்டையுடன் வெளியிடப்படும் [[விகடன் தீபாவளி மலர்| விகடன் தீபாவளி மலரில்]] மொழிபெயர்ப்பு கதைகள், சிறுகதைகள், பிரபலங்களைப் பற்றிய கட்டுரைகள், நகைச்சுவை துணுக்குகள், கவிதைகள் ஆகியவை இடம் பெறும்.
 
==விகடன் பிரசுரம் ==
"https://ta.wikipedia.org/wiki/விகடன்_குழுமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது