மட்டுவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
==வரலாறு==
யாழ்ப்பாணம் பற்றிய தமிழ் - சிங்கள வரலாற்று இலக்கியங்களில் எடுத்து உரைக்கப்படும் மிக முக்கியமான இடங்களில் சவகிரி என்னும் இடம் வரலாற்று முக்கியத்துவம் பெற்று விளங்குவது சிறப்பாக நோக்கத்தக்கது. இங்கு குறிப்பிடப்படும் சவகிரி என்னும் இடம் தற்கால சாவகச்சேரி பிரதேசத்தைக் குறிப்பதாகக் கருத முடியும். அந்த வகையில் சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள மட்டுவில் கிராமம் வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடமாக நோக்கக் கூடியவாறு உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதற்காக மட்டுவில் பிரதேசத்தின் வரலாற்று பழைமை பற்றியும் அதன் வரலாற்று ஆதாரங்களோடு கூடிய முக்கியத்துவம் பற்றியும்தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
1267 ஆம் ஆண்டுக்குரிய சோழக் கல்வெட்டுக்களான பல்லவராஜன் பேட்டைக் கல்வெட்டும், திருவாலங்காட்டுக் கல்வெட்டும் சோழப் படைத்தளபதியான இரண்டாம் இராஜாதிராஜ சோழன் வட இலங்கை மீது படையெடுத்தது பற்றிக் குறிப்பிடுகின்றன. அப்படையெடுப்பின் போது அக்கால கட்டத்தில் துறைமுகமாக விளங்கிய மட்டுவில் என்னும் இடத்தையும், அங்கு நிலை கொண்ட [[யானை]]களையும், படை வீரர்களையும் சிறைப் பிடித்து சோழப் படைகள் [[தமிழ் நாடு]] கொண்டு சென்றதாகவும் குறிப்பிடுகின்றன. [[முதலாம் சங்கிலி|சங்கிலி]] மன்னன் போர்த்துக்கேயப் படைகளோடு போரிட்ட போது, அங்கிருந்து [[கோப்பாய்]]க்குத் தப்பியோடி, கடல் வழியாக மட்டுவில் ஊடாக தென்மராட்சி சென்றதாக யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றது. [[யாழ்ப்பாண அரசர்களின் பட்டியல்|யாழ்ப்பாண மன்னர்]]களுக்கு உரிய படைக் கருவிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக [[பலாலி]], [[ஏழாலை]] மற்றும் மட்டுவில் ஆகிய கிராமங்கள் விளங்கியதாக போர்த்துக்கேய ஆசிரியரான கொய்ரோ சுவாமி குறிப்பிடுகிறார்.
 
இவ் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்கு 1267 ஆம் ஆண்டுக்குரிய இரு சோழக் கல்வெட்டுகள் உதவி புரிகின்றன. அதாவது 12 ஆம் நூற்றாண்டுக்குரிய சோழக் கல்வெட்டுக்களான பல்லவராஜன் பேட்டைக் கல்வெட்டும் திருவாலங்காட்டுக் கல்வெட்டும் சோழப் படைத் தளபதியான இரண்டாம் இராஜாதிராஜ சோழன் வட இலங்கை மீது படையெடுத்தது பற்றிக் குறிப்பிடுகின்றன. மேலும் அப்படையெடுப்பின் போது அக்கால கட்டத்தில் துறைமுகமாக விளங்கிய மட்டுவில் என்னும் இடத்தையும் அங்கு நிலை கொண்ட யானைகளையும் படை வீரர்களையும் சிறைப் பிடித்து சோழப் படைகள் தமிழ் நாடு கொண்டு சென்றதாகவும் குறிப்பிடுகின்றன.
 
இவற்றை விட மிக முக்கியமாக சங்கிலிய மன்னனோடு தொடர்பு பட்ட செய்தி ஒன்றும் கூறப்படுகிறது. சங்கிலிய மன்னன் போர்த்துக்கேயப் படைகளோடு போரிட்ட போது, அங்கிருந்து கோப்பாய்க்குத் தப்பியோடி கடல் வழியாக மட்டுவில் ஊடாக தென்மராட்சி சென்றதாக யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகின்றது. அத்துடன் யாழ்ப்பாண மன்னர்களுக்கு உரிய படைக் கருவிகள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக பலாலி, ஏழாலை மற்றும் மட்டுவில் ஆகிய கிராமங்கள் விளங்கியதாக போர்த்துக்கேய ஆசிரியரான கொய்ரோ சுவாமி அவர்கள் குறிப்பிடுவது அடுத்த மிக முக்கியமான விடயமாகக் கருதப்படுகிறது.
 
இந்த வரலாற்று பின்னணியுடன் இக்கிராமத்திலுள்ள வரலாற்று பழைமை வாய்ந்த ஆலயமாக கல்வத்தைச் சிவன் கோயில் விளங்குகின்றது. ஒரு துறைமுகத்தை அண்டி அமைந்திருந்த இடத்தை வத்தை எனச் சிறப்பாக அழைக்கும் மரபு உண்டு. எனவே தான் இக்கோயில் அமைந்த இடத்தை கல்வத்தை என அழைத்திருக்கலாம் எனவும் அதன் காரணத்தாலேயே இக்கோயிலுக்கு கல்வத்தை சிவன் கோயில் எனப் பெயர் வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் கருத முடியும்.
 
சங்கிலிய மன்னன் தொடர்பான வரலாற்றுக் குறிப்புக்கள், சோழ கல்வெட்டுச் சாசனங்கள், பாளி மற்றும் சிங்கள இலக்கியங்களில் பொதுவாகக் கூறப்படும் சவகிரி ஆகியவற்றை ஒப்பு நோக்கும்போது, யாழ்ப்பாண நகரில் இருந்து தென்மராட்சிக்குப் போகின்ற மிக முக்கிய பாதைகளில் ஒன்றாக மட்டுவில் கிராமம் அமைந்திருக்கின்றது என்பது தெரிகிறது. அதிலும் கோப்பாயில் உள்ள சங்கிலியன் கோட்டையில் ஒரு காவலரண் காணப்படுவதும் அக்காவலரணில் இருந்து பார்க்கும்போது மட்டுவில் கிராமத்தின் ஒரு எல்லை தெரிவதும் குறிப்பிடத்தக்கது. அதாவது சிறிய குடாநீரேரிக்கு எதிரில் வரலாற்று சிறப்பு மிக்க மட்டுவில் கிராமமும் அதை அடுத்து கல்வத்தை சிவன் கோயிலும் அமைந்துள்ளன. ஆகவே இத்தகைய வரலாற்றுப் பின் புலத்திலே இங்கு ஓர் ஆலயம் அமைந்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு.
 
==மட்டுவிலில் பிறந்தவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மட்டுவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது