தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
இக்கல்லூரியானது அறுபது, எழுபதுகளில் இலங்கையின் பல பாகங்களில் இருந்து கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கி, பெரும்பான்மையான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாவதற்கு ஊன்று கோலாக இருந்துள்ளது. இலங்கையில் கல்விமான்கள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் பலரை உருவாக்கும் உன்னத பணியில் மகாஜனாவுக்கு தனிப் பங்கு உண்டு. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் கல்லூரி பல இடங்களில் இடம் பெயர்ந்து, தற்காலிக கொட்டகைகள் பலவற்றில் இயங்கியமையும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் கல்லூரி தனது சொந்த இடத்தில் நூற்றாண்டைக் கண்டமை மன மகிழ்வுக்கு உரியது.
 
இங்கு கல்வி கற்ற ஒவ்வொருவரும் மகாஜனாவை தங்கள் அன்னையாக உணர்கிறார்கள்; பார்க்கிறார்கள்; மதிக்கிறார்கள்; வணங்குகிறார்கள்.

'மகாஜனா எங்கள் தாய்; எங்களது அறிவின் ஆதாரம்; நாங்கள் வரித்துக் கொண்ட இலட்சியங்கள், எங்களை வழிப்படுத்துகின்ற விழுமியங்கள், எங்கள் வாழ்வுக்கான திறன்கள், மேலான ரசனைகள் அனைத்தும் மகாஜனா அன்னையின் அருட்கொடைகள்'' என பேராசிரியர் நா.சண்முகலிங்கம் அவர்கள் பெருமை கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
 
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சியின் பலனால் பல கல்வி நிறுவனங்கள் உருவாகின. அக்கல்வி நிறுவனங்களுக்கும் மகாஜனாவுக்கும் பாரியதொரு வேறுபாடு உண்டு. ஏனைய பாடசாலைகள் குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த வசதி படைத்த பேருள்ளம் கொண்ட நிலச் சுவாந்தார்கள் மற்றும் வள்ளல்கள் முதலியோரால் ஆரம்பிக்கப்பட்டன. அதேவேளை "இந்து போர்ட்' முதலிய கல்வி நிறுவனங்களால் ஸ்தாபித்துப் பராமரிக்கப் பட்டன. ஆனால் மகாஜனாக் கல்லூரியானது, கல்வி அறிஞர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்டு, கிராம மக்களாலும், பழைய மாணவர்களாலும், பெற்றோர்களாலும் வளர்த்தெடுக்கப்பட்டது. இதனாலேயே ஒரு சிறிய பாடசாலை 'கிராமத்துப் பல்கலைக்கழகமாக'ப் பரிணமித்தது என்றால் அது மிகையாகாது.
வரி 42 ⟶ 44:
இலங்கை அரசாங்கம் இக்கல்லூரி ஸ்தாபகரான அருளம்பலம் துரையாப்பாபிள்ளை அவர்களை கௌரவிக்கும் முகமாக ஞாபகார்த்த முத்திரை ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கல்லூரிப் பழைய மாணவரான பேராசிரியர் அருட்குமரன் 'Knighthood' பட்டம் பெற்றமையும் கல்லூரிக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே கருதப்படுகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி பேராசிரியர் அருட்குமரனுக்கு இவ்விருது கிடைத்த செய்தியை London Gazette - 'The most forward-thinking medical leader in this coutry' எனத் தனது இணையத் தளத்தில் விபரிக்கிறது.
 
ஆரம்ப காலத்தில் கிராமச் சூழலில் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் அறிவாலயம், படிப்படியாக வளர்ச்சி கண்டு இலங்கையின் பல பாகங்களில் உள்ள மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ததுடன், கடந்த நூறு ஆண்டுகளில் தலை சிறந்த கல்விமான்கள் பலரையும் உருவாக்கியுள்ளமை கல்லூரிக்கும், ஸ்தாபகருக்கும் மற்றும் அதிபர், ஆசிரியர்களுக்கும் கிடைத்த அளப்பரிய வெற்றியாகும். வேளாண்மை வளம் மிக்க செம்பாட்டு மண்ணில், தமிழர் பண்பாட்டு வேர்கள் ஆழப் பதிந்துள்ள தெல்லிப்பழை ஊரின் நடுவில், சைவமும் தமிழும் நிறைந்த கல்விச் செல்வம் தழைத்தோங்க வேண்டும் என்ற அவாவுடன் ஆரம்பிக்கப்பட்ட மகாஜனாவின் தொடக்கமானது, தமிழர்களின் மிக உயர்ந்த வரலாற்று நிகழ்வாக பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. தம்மொழி, மதம், நிலம், பண்பாடு முதலியவற்றைப் பேணிப் பாதுகாக்க நினைக்கும் ஒரு மனிதனின் உயர்ந்த எண்ணங்கள் வாழும் ஆலயமாக "மஹாஜனா அன்னை' போற்றப்படுகிறாள்.
 
==தலைமை ஆசிரியர்கள்==
* ரி. ரி.ஜெயரத்தினம்
"https://ta.wikipedia.org/wiki/தெல்லிப்பழை_மகாஜனக்_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது