'''மலேசியத் தீபகற்பம்''' அல்லது '''மலேசிய [[மூவலந்தீவு]]''' (''Peninsular Malaysia'', [[மலாய் மொழி|மலாய்]]: ''Semenanjung Malaysia''), அல்லது '''மேற்கு மலேசியா'''<ref>மலேசியா நாட்டின் இன்னொரு பகுதியான, [[சபா (மலேசியா)|சபா]], [[சராவாக்குசராவாக்]]ப் பகுதிகளைக் கொண்ட [[கிழக்கு மலேசியா]] என்பது இந்தோனேசியத் தீவின் ஒரு பகுதியாகும். இது மலேசிய மூவலந்தீவில் இருந்து [[தென்சீனக்கடல்|தென்சீனக் கடலால்]] பிரிக்கப்பட்டு இருக்கும் நிலப்பகுதி</ref> (முன்னர் '''மலாயா'''), என்பது [[மலாய் தீபகற்பம்|மலாய் தீபகற்பத்தில்]] (மலேசிய [[மூவலந்தீவு|மூவலந்தீவில்]]) அமைந்திருக்கிறது. இது [[மலேசியா]]வின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 131,598 சதுர கிமீ (50,810 சதுர மைல்கள்). இது வடக்கே [[தாய்லாந்து]] நாட்டை நில எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கே [[சிங்கப்பூர்]] உள்ளது. மேற்கே [[மலாக்கா நீரிணை]]க்கு மறுகரையில் [[சுமாத்திரா]] தீவு அமைந்துள்ளது. கிழக்கே [[தெற்கு சீனக் கடல்|தெற்கு சீனக் கடலுக்கு]] மறுகரையில் [[கிழக்கு மலேசியா]] ([[போர்ணியோபோர்னியோ]] தீவில்) உள்ளது. ஏறத்தாழ 21 மில்லியன் [[மக்கள்தொகை]]யைக் கொண்டுள்ளது இத்தீபகற்பம் (இம் [[மூவலந்தீவு]]).