எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 63:
'''எகிப்து''' வடக்கு [[ஆப்பிரிக்கா]]வில் உள்ள ஒரு குடியரசு நாடு. [[கெய்ரோ]] இந்நாட்டின் தலைநகர் ஆகும். இது உலகின் 15வது அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகும். மேற்கே [[லிபியா|லிபியாவையும்]], தெற்கே [[சூடான்|சூடானையும்]], கிழக்கே [[காசாக் கரை]] மற்றும் [[இஸ்ரேல்|இஸ்ரேலையும்]] எல்லையாக கொண்ட எகிப்தின் பரப்பளவு சுமார் 1,001,450 சதுர கி.மீ. வடக்குக் கரையில் [[மத்தியதரைக் கடல்|மத்தியதரைக் கடலும்]] கிழக்குக் கரையில் [[செங்கடல்|செங்கடலும்]] எகிப்தின் எல்லைகளாக உள்ளன. எகிப்தின் சினாய் தீபகற்பம் தென்மேற்கு ஆசியாவில் உள்ளதால், இந்நாடு இருகண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.எகிப்தின் ஜீவ நதியாக [[நைல்|நைல் நதி]] பாய்கிறது. நைல் நதிக் கரையிலிருக்கும் விவசாய நிலங்களைத் தவிர பெரும்பாலான நிலங்கள் பாலைவனங்களாகவே உள்ளன. ஆப்பிரிக்காவிலும் மையக் கிழக்கிலும் உள்ள நாடுகளுள் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளுள் எகிப்தும் ஒன்று. 82.2 மில்லியன்<ref name="popclock">{{cite web |url=http://www.msrintranet.capmas.gov.eg/pls/fdl/tst12e?action=1&lname= |title=Population Clock |date=16 April 2011 |publisher=[[Central Agency for Public Mobilization and Statistics]] |accessdate=16 April 2011}}</ref> மக்களைக் கொண்ட இந்நாட்டின் பெரும்பாலானவர்கள், நைல் நதிக்கரையில் இருக்கும் 40,000 சதுர கிலோமீட்டர் (15,000 சதுர மைல்) பரப்பளவு கொண்ட நிலப்பகுதியிலேயே வாழ்கின்றனர். இப்பகுதிகளிலேயே வேளாண்மை செய்யக்கூடிய நிலங்கள் காணப்படுவதுடன் [[கெய்ரோ]], [[அலெக்சாந்திரியா]], [[லூக்சூர்]] போன்ற பெரிய நகரங்களும் அடங்குகின்றன. மிகப் பெரிய [[சகாராப் பாலைவனம்|சகாராப் பாலைவனப்]] பகுதிகளில் குறைவான மக்களே வாழ்கின்றனர். எகிப்தில் வாழ்பவர்களுள் ஏறத்தாழ அரைப் பங்கினர் நகர்ப்புறப் பகுதிகளிலேயே வாழ்கின்றனர்.
 
இந்நாட்டுக்கு விடுதலை 1922-ல் வழங்கப்பட்டு 1953-ல் அறிவிக்கப்பட்டது. பண்டைக் காலத்தில் சிறப்புற்று விளங்கிய எகிப்தின் பழங்காலத்து மன்னர்களால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட [[பிரமிடு]]கள் உலகப்புகழ் பெற்றவை. எகிப்தில் உள்ள [[நினைவுச் சின்னம்|நினைவுச் சின்னங்களான]] கிசா பிரமிடுத் தொகுதி, பெரிய [[இசுஃபிங்சு]] என்பன பண்டை எகிப்து நாகரிகக் காலத்தைச் சேர்ந்தவை. [[மெம்பிசு, எகிப்து|மெம்பிசு]], [[தேப்சுதீபை]], [[கர்னாக்]] போன்ற இடங்களில் உள்ள பண்டைய அழிபாடுகளும், லூக்சூருக்கு வெளியே உள்ள [[மன்னர்களின் பள்ளத்தாக்கு]]ப் பகுதியும் பெருமளவில் [[தொல்லியல்]] ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்பவை.
 
மையக்கிழக்கில் எகிப்தின் பொருளாதாரமே மிகக் கூடிய பல்வகைத்தன்மை கொண்டது. இந்நாட்டில் [[சுற்றுலாத்துறை]], [[வேளாண்மை]], [[தொழிற்றுறை]], [[சேவைத்துறை]] என்பன ஏறத்தாழ ஒரேயளவு உற்பத்தி அளவைக் கொண்டவை.
"https://ta.wikipedia.org/wiki/எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது