பராக் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2012 அதிபர்
referenc+ (edited with ProveIt)
வரிசை 39:
}}
 
'''பராக் உசேன் ஒபாமா''' (''Barack Hussein Obama'', [[:en:Wikipedia:IPA for English|பலுக்கல்]]: bəˈrɑːk hʊˈseɪn oʊˈbɑːmə, பிறப்பு: [[ஆகஸ்ட் 4]], [[1961]]), [[ஐக்கிய அமெரிக்கா]]வின் தற்போதைய குடியரசுத் தலைவர். [[2008 அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்|2008 குடியரசுத் தலைவர் தேர்தலில்]] [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]] வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார், நவம்பர் 6, 2012 அன்று நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக நின்ற [[மிட் ராம்னி]]யை தோற்கடித்து மீண்டும் அதிபர் ஆனார்.<ref name="வலம்புரி">{{cite web | url=http://www.valampurii.com/viewnews.php?ID=31654 | title=ஒபாமா மீண்டும் அதிபரானார் | publisher=வலம்புரி | date=நவம்பர் 08, 2012 | accessdate=நவம்பர் 08, 2012}}</ref> அதிபராவதற்கு முன் இவர் அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் (செனட்) [[இலினொய்]] மாநிலத்தின் சார்பில் இளைய உறுப்பினராகப் பணியாற்றினார். அமெரிக்க வரலாற்றில் [[ஆபிரிக்க அமெரிக்கர்|ஆபிரிக்க அமெரிக்க]] இனத்தை சேர்ந்த முதலாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையும், மற்றும் செனட் அவையின் உறுப்பினரான ஐந்தாவது ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
 
[[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா]] பல்கலைக்கழகத்திலிருந்தும் ஹார்வர்ட் சட்டக் கல்லூரியிலிருந்தும் பட்டங்களை பெற்ற ஒபாமா அரசியல் உலகத்தை சேர்வதற்கு முன்பு [[சிக்காகோ]]வின் தெற்கு பகுதியில் சமுதாய ஒருங்கிணைப்பாளராகவும் (community organizer) பொதுச் சட்ட வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1997இல் இலினொய் மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு 2004 வரை பதவியில் இருந்தார். [[1992]] முதல் 2004 வரை [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழக சட்டக் கல்லூரியில்]] பேராசிரியராகவும் பணியாற்றினார். [[2000]]இல் அமெரிக்கக் கீழவை தேர்தலில் தோல்வி அடைந்து [[2003]] ஜனவரியில் மேலவையை சேர்வதற்கு பிரச்சாரத்தை தொடங்கினார். இலினொய் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் பொழுதே, 2004ல் மக்களாட்சிக் கட்சி தேசிய சம்மேளனத்தில் இவர் ஆற்றிய சிறப்புரை தேசிய அளவில் கவனம் பெறச்செய்தது. பின்னர் நவம்பர் 2004 இல் அமெரிக்க மேலவை தேர்தலில் 70% வக்குகளைப் பெற்று மேலவையை சேர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பராக்_ஒபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது