கருணாகரப் பிள்ளையார் கோயில், உரும்பிராய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
==வரலாறு==
===தோற்றம்===
பலவித மரங்களும் அடர்ந்து சூழ்ந்து இருந்த இவ்விடத்தில் ஓர் அரச மரத்தின் கீழே ஒரு பிள்ளையார் லிங்கம் இருந்ததாகவும், தோன்றிய காலம் எது என்று தெரியாத அந்த இலிங்கத்தை வழிப்போக்கர்களும், ஊர் மக்களும் வழிபட்டு வந்தனர் என்றும் செவிவழிக் கதைகளை மேற்கோள் காட்டி அ. பஞ்சாட்சரம் கூறுகிறார்.<ref>பஞ்சாட்சரம், அ., உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் வரலாறும் மகத்துவமும், உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிசேக மலர், 1973.</ref> யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட [[ஆரியச் சக்கரவர்த்தி]] வம்சத்தின் முதல் அரசனான [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] இவ்வழியாகச் சென்றபோது இந்த இலிங்கத்தைக் கண்டு அதை வழிபட்டுப் பயன் பெற்றதாகவும், அதனால் அரசர், அங்கே செங்கல்லால்[[செங்கல்]]லால் ஒரு கோயிலைக் கட்டுவித்ததாகவும் செவிவழிக் கதைகள் உள்ளனவாம்.<ref>பஞ்சாட்சரம், அ., 1973.</ref>
 
தமிழகத்தில் இருந்து வந்த [[கருணாகரத் தொண்டைமான்]] என்பவன் யாழ்ப்பாணத்தில் இருந்து உப்பு எடுத்துச் செல்வதற்காகத் தொண்டைமான் ஆற்றை[[தொண்டைமானாறு|தொண்டைமானாற்றை]] வெட்டுவித்தான் என்று [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறுகின்றது. இந்தப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது இணுவிலில் தங்கியிருந்த தொண்டைமான் கருணாகரப் பிள்ளையார் கோயிலைக் கட்டுவித்திருக்கலாம் என்று செ. இராசநாயகம் கருதுகிறார்.<ref>இந்திரபாலா, கா. "உரும்பிராய் கருணகாரப் பிள்ளையார் கோயிலிலுள்ள கல்வெட்டுக்கள்", உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் மகா கும்பாபிசேக மலர், 1973, ப -35</ref>. இவை தவிர, கருணாகரப் பிள்ளையார் கோயில் கருணாகரத் தொண்டைமானின் ஆட்சிக்குத் துணையாகவிருந்த கருணாகரர் என்பவரால் கட்டப்பட்டது, கருணாகர ஐயர் என்பவரால் பூசிக்கப்பட்டும், பாதுகாக்கப்பட்டும் வந்தமையால் கருணாகரப்பிள்ளையார் என்ற பெயர் வந்தது<ref name="noolaham"/> போன்ற கருத்துக்களும் உண்டு.
 
===கல்வெட்டுக்கள்===