துன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
துன் விருதைப் பெற்ற ஒரே இந்தியர், ஒரே தமிழர் [[வீ. தி. சம்பந்தன்]] மட்டுமே. அவருக்கு 1967ஆம் ஆண்டு அந்த விருது வழங்கப்பட்டது. வெளிநாட்டவர்களுக்கும் துன் விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருதைப் பெற்றவர்கள் மொத்தம் 68 பேர். இவர்களில் 45 பேர் மரணம் அடைந்து விட்டனர். உயிரோடு உள்ளவர்கள் 23 பேர்.<ref>[http://ms.wikipedia.org/wiki/Tun/ Senarai penerima gelaran Tun.]</ref> 2001ஆம் ஆண்டில் [[பஹ்ரேய்ன்|பஹ்ரேய்ன்]] நாட்டுப் பிரதமர் துன் ஷெயிக் காலிபா,<ref>[http://en.wikipedia.org/wiki/List_of_honorary_Malay_title_holders#2001/ Prime Minister of Bahrain, Tun H.H. Shaikh Khalifa Bin Salman Al-Khalifa.]</ref>2005ஆம் ஆண்டில் [[சுவீடன்]] நாட்டு இளவரசியார் வாஸ்டர் கோட்லாண்ட்<ref>[http://en.wikipedia.org/wiki/List_of_honorary_Malay_title_holders#2005/ Her Royal Highness Crown Princess Victoria of Sweden.]</ref> போன்றோர் துன் விருதைப் பெற்றுள்ளனர்.
 
மலாயாவில் துன் விருது வழங்கப்படுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. மலாய் அரசர்களிடையே அந்த நடைமுறை நீண்ட நாட்களாக இருந்து வந்த போதிலும் ஆண்களுக்கு மட்டுமே அந்த விருது வழங்கப்பட்டு வந்தது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு பெண்களுக்கும் வழங்கப்படும் முறை அமலுக்கு வந்தது. துன் விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை தோ புவான் ''(Toh Puan)'' என்று அழைக்க வேண்டும். இதே விருது பெண்களுக்கு தனிப்பட்ட வகையில் கிடைக்குமானால் அவரை துன் என்றே அழைக்க வேண்டும்.
 
மலேசியாவில் இதுவரை [[வீ. தி. சம்பந்தன்]] அவர்களைத் தவிர, வேறு இந்தியர்கள் எவருக்கும் துன் விருது வழங்கப்படவில்லை. மலேசியத் தமிழர்களுக்கு அது ஒரு வரலாறு.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/துன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது