ஆப்கானித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ba:Афғанстан
சி r2.7.3) (Robot: Modifying pam:Afghanistan to pam:Afganistan; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 57:
|footnotes =
}}
'''ஆப்கானித்தான்''' அல்லது '''ஆப்கனிசுத்தான்''' ('''ஆப்கானிஸ்தான்''', ''Afganistan'') என்னும் நாட்டின் முழுப்பெயர் ''ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு'' ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட [[மத்திய ஆசியா|நடு ஆசிய]] நாடாகும். இது சில நேரங்களில் [[மத்திய கிழக்கு|மத்திய கிழக்கு நாடாகவும்]], [[தெற்காசியா]]வின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு. மேற்கே, [[ஈரான்|ஈரானை]] எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் [[பாக்கிஸ்தான்|பாக்கிஸ்தானை]]எல்லையாக உடையது; வடக்கே [[துருக்மெனிஸ்தான்]], [[உஸ்பெகிஸ்தான்]], [[தாஜிக்ஸ்தான்]] என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் [[மக்கள் சீனக் குடியரசு|சீனாவை]] எல்லையாகக் கொண்டுள்ளது. பாகித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி [[இந்தியா]]வால் உரிமை கோரப்படும் [[சம்மு காசுமீர்|காசுமீரூடாகச்]] செல்கிறது. [[இந்தியா]]வை [[வர்த்தகம்]] [[ஆக்கிரமிப்பு]] போன்ற காரணங்களுக்காக [[மத்திய ஆசியா]]வுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆப்கானித்தான் வழியேதான் செல்கின்றன. [[1747]] முதல் [[1973]] வரை ஆப்கானித்தான் ஒரு [[முடியாட்சி]] நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.
 
== பெயரின் பிண்னனி ==
'ஆப்கானித்தான்' என்பதன் நேரடிப்பொருள் -[[மொழிபெயர்ப்பு]]- ஆப்கானியரின் பூமி (நிலம்) என்பதாகும். இது 'அஃப்கான்' என்ற சொல்லில் இருந்து -தற்கால வழக்கு- மருவி வந்துள்ளது. பழ்சுட்டுன்-கள்(பட்டாணியர்கள்) இசுலாமியர் காலத்தில் இருந்து, இந்த 'அப்கான்' என்ற பதத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். டபிள்யு.கே ஃபிரைசர் டெய்லர், எம்.சி சில்லட் மற்றும் சில துறைசார் அறிஞர்களின் கருத்துப்படி, "அப்கான் என்ற சொல் முதன்முதலாக வரலாற்றில் கி.பி. 982 இல் 'அதூத்-அல்-அலாம்' என்ற கி பி 10ஆவது நூற்றாண்டு வரலாற்று நூலில்தான் காணப்படுகின்றது. ” இறுதிச் சொல்லான '-த்தான்' (ஸ்தான்) (நாடு, நிலம்) என்பது [[பாரசீக மொழி]]யில் இருந்து உருவாகியதாகும். ஆப்கான்லாண்ட் (Afghanland) என்ற ஆங்கிலச்சொல், 1781 முதல் 1925 வரை பாரசீகத்தை ஆண்ட 'குவாச்சார்' அரசவம்சத்திற்கும் [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திற்கும்]] இடையிலான பல்வேறு உடன்படிக்கைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
ஆயினும், தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெயர் உச்சரிப்பு முறையானது 18 ஆம் நூற்றாண்டில் அகமத் சா அப்துல் அலி, புதிய அரசை அமைத்ததில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது பின்னர் 'அப்துர் ரகுமான் கான்' என்பவரால் இது அரச ஏற்புடைய பெயராக அறிவிக்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆப்கானித்தான் பெயர் ''குராசான்'' என்றே வழங்கப்பட்டது. இன்றைய ஆப்கானித்தானின் பெரும் நிலப்பகுதி குராசானையே மையமாகக் கொண்டுள்ளது.
வரிசை 73:
 
=== கி.பி ===
கிபி முதலாம் நூற்றாண்டில தொசேரியன்,குசானர்கள்(Tocharian Kushans) போன்றோர், இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். [[அரேபியர்]] இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை பாரசீகர்,சித்தியர்(Parthians, Scythians), மற்றும் மொங்கோலியரான ஃகூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும்(Eurasian tribes), சாசானியர்கள் (Sassanian) போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாஃகிகள் (Hindu Shahis) போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர்.
 
ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானித்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானித்தானுக்கு [[652]] இல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் [[706]]-[[709]] வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை '''குராசான்''' என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் [[முசுலிம்]]களாக மாறினர்.
வரிசை 85:
=== சோவியத் ஆக்கிரமிப்பு ===
[[படிமம்:Mohammed Daoud Khan.jpg|thumb|left|1973 முதல் 1978 வரை 'முகம்மது தாவூத் கான்' ஆப்கானியக் குடியரசின் அதிபராவார்.]]
இந்த இடது சாரி அரசும் உட்பிரச்சனை, எதிர்ப்புகள் என்று பல்வேறு கடுஞ்சிக்கல்களை எதிர்கொண்டது. உருசியா – அமெரிக்காவிற்கு இடையிலான பனிப்போரில் ஆப்கானித்தானும் அகப்பட்டுக்கொண்டது. 1979 இல் ஜிம்மி காட்டர் தலைமையிலான அமெரிக்க அரசு, அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் 'சிக்னீவ் பிரசின்கி'(Zbigniew Brzezinski)-அவர்களின் ஆலோசனையினால் [[பாக்கித்தான்|பாக்கித்தானின்]] ஐ.எசு.ஐ மூலம் இடதுசாரி எதிர்ப்பாளர்களான முச்சாகதீன்களுக்கு உதவி அளித்தது. பல்வேறு பன்னாட்டு அழுத்தங்களினாலும், சுமார் 15,000 துருப்புக்களை முச்சாகதீன்களுடனான போரில் இழந்ததனால், சோவியத் துருப்புகள் 10 ஆண்டுகளின் பின்னர் 1989 இல் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின. ஆப்கானித்தானில் இருந்து சோவியத் படைகள் வெளியேற்றப்பட்டது அமெரிக்கர்களுக்குப் பெரிய வெற்றியாகக் கருதப்பட்டது. சோவியத் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேற்றப்பட்டதும், அமெரிக்காவிற்கு ஆப்கானித்தான் மீதான நாட்டம் குறைந்தது. அமெரிக்கா போரினால் சிதைந்துபோன ஆப்கானித்தானைச் சீரமைக்க உதவவில்லை. சோவியத் ரசியா தொடர்ந்தும், அதிபர் நச்யிபுல்லாவிற்குத் தமது ஆதரவை வழங்கியது; ஆயினும் 1992 இல் இவர் வீழ்த்தப்பட்டார். சோவியத் படைகள் வெளியேறியமை, இந்த இடதுசாரி அரசின் வீழ்ச்சிக்கும், போராளிகள் ஆட்சியைக் கைப்பற்றவும் உறுதுணையாக இருந்தது.
 
பல சிறுபான்மையினரும், அறிவுஜீவிகளும் யுத்தத்தின் பின்னர் ஆப்கானித்தானைவிட்டு வெளியேறினர். சோவியத் வெளியேற்றத்தின் பின்னரும், முச்சாகதீன்களின் பல உட்பிரிவுகளுக்கிடையில் போர்கள் மூளலாயின. இதன் உச்ச கட்டமாக 1994 இல் 10,000 பொதுமக்கள் காபூலில் கொல்லப்பட்டனர். இக்காலகட்டத்தில் தாலிபான் அமைபப்பு எழுச்சி பெற்றது. இவர்கள் பெரும்பாலும் எல்மான்ட், கந்தகார் நிலப்பகுதிகளைச் சோந்த பட்டாணியர்கள் (Pashtuns) ஆவர்.
வரிசை 107:
 
== அரசாங்கமும் கொள்கைகளும் ==
ஆப்கானித்தானின் அரசியலானது வரலாற்று ரீதியாகப் பல்வேறுபட்ட குழப்பங்கள் நிறைந்தது. உதாரணமாக, பல்வேறுபட்ட அரசியல் பதவிச் சண்டைகள், இராணுவப் புரட்சிகள், நிலையற்ற ஆட்சி அதிகார மாற்றம் என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த நாடு இராணுவ ஆட்சி, அரசாட்சி, குடியரசு, சமவுடைமை அரசு என்று பல்வேறு பட்ட ஆட்சிமுறைகளின்கீழ் இருந்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் அரசியல் சட்டம், லோயா ஜிர்காவால் மீள் அமைக்கப்பட்டது. இதன்படி ஆப்கானித்தான் ஓர் இசுலாமியக் குடியரசாக மாற்றப்பட்டது. இதில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன; அவை நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை என்பனவாகும்.
 
ஆப்கானின் தற்போதைய அதிபராக ஹமீது கர்சாய் உள்ளார். இவர் 2004 அக்டோபரில் தெரிவுசெய்யப்பட்டார். இவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்திருத்துவதற்காக எடுத்த நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தியமை போன்ற காரணங்களுக்காகப் பாராட்டப்பட்டாலும் இன்னமும் அடக்கப்படாமல் உள்ள பழைய இராணுவத் தலைமைகளால் கொஞ்சம் கெட்ட பெயரும் உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றம் 2005 இல் தெரிவுசெய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்டவர்களில் முன்னாள் முஜாஹிதீன்கள், தாலிபான்கள், சமவுடைமைவாதிகள், மறுசீரமைப்பாளர்கள் மற்றும் இஸ்லாமியப் பழைமைவாதிகள் உள்ளடங்குவர். இவர்களுள் 28% பெண்கள் ஆவர்; இதன் மூலம் தாலிபான் ஆட்சியில் இருந்த பெண்களுக்கு எதிரான அடக்குமுறை குறைந்துள்ளதுடன், 'அதிகளவு பெண்களை நாடாளுமன்றத்தில் கொண்ட நாடுகளில் ஆப்கானித்தானும் ஒன்று' என்ற நிலையையும் பெற்றது.
வரிசை 121:
''முதன்மைக் கட்டுரை: [[ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம்]]''
 
ஆப்கானித்தான் உலகில் மிக வறுமையான, பின்தங்கிய அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் ஒன்றாகும். மூன்றில் இரண்டு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு (2) அமெரிக்க டொலர் பண மதிப்புக்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர். பொருளாதாரம் 1979 தொடக்கம் இருந்த அரசின் நிலையற்ற தன்மையால் பலமாகப் பாதிக்கப்பட்டது.
 
நாட்டில் பெருளாதார ரீதியாக செயலூக்கத்துடன் 11 மில்லியன் (மொத்தம் 29 மில்லியன் மக்கள் உள்ளனர்) மக்கள் உள்ளதாக 2002 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன. ஆயினும் வேலையில்லாதோர் வீதம் பற்றிய உத்தியோகபூர்வமான தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை, ஆயினும் அந்த நாட்டில் வேலையில்லாதோர் விழுக்காடு(%) மிக உயர்வு என்பதே உண்மை. தொழில்சார் பயிற்சி இல்லாத இளம் சமுதாயத்தில் கிட்டத்தட்ட மூன்று(3) மில்லியன் அளவினர் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இது ஒவ்வோர் ஆண்டும் சுமார் 300,000 இனால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வரிசை 182:
'தாரி' என்பது கிழக்கில் பேசப்படும் பாரசீக மொழியின் வித்தியாசமான ஒரு பேச்சு வழக்காகும்.
 
இன்றய ஆப்கானித்தான், அன்று 'குராசான்' என்று அழைக்கப்பட்டது; அங்கு 10ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு வரை பல அறிஞர்கள் தோன்றியுள்ளனர். இவர்கள் மொழி, இயற்கை விஞ்ஞானம், மருத்துவம், சமயம், வானியல் போன்றவற்றில் தேர்ச்சி உடையவர்களாக இருந்துள்ளனர். உதாரணமாக 'மெளலானா றூமி' என்பவரைக் கூறலாம். இவர் 13 ஆம் நூற்றாண்டில் பல்க் நகரில் பிறந்ததுடன் அங்கேயே கல்வி கற்றார்; பின்னர் இவர் 'கோன்யா' (இன்றய துருக்கியில் உள்ள இடம்.) என்ற பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தார். சனாயி கஸ்வானி (12ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் கஸ்னி மாகாணம்), ஜாம்-ஏ-ஹீரத்(15ஆம் நூற்றாண்டு, பூர்வீகம் Jam-e-Herat, மேற்கு ஆப்கானித்தான்), Nizām ud-Dīn Alī Sher Navā'ī, நிசாம்-உத்-தீன் அலி சேர் நவாஇ என்பவர் (15ம் நூற்றாண்டு, ஹீரட் மாகாணம்). இவர்களில் பெரும்பாலானோர் பாரசீகர் ஆவர். (தாஜிக்) இனத்தைச் சேர்ந்தவர்கள்; இவ்வினத்தைச் சேர்ந்தவர்களே. இவர்கள் நாட்டில் இரண்டாவது அதிகமான இனத்தவராக இருந்து வருகின்றனர். இவர்களை விட உசுதாத் பிதாப், கலிலுல்லா கலிலி, சூஃபி குலாம் நபி அஷ்காரி, ககார் ஆசே, பர்வீன் பசுவாக் போன்ற பாரசீக எழுத்தாளர்கள் (Ustad Betab, Khalilullah Khalili,[51] Sufi Ghulam Nabi Ashqari, Qahar Asey, Parwin Pazwak) ஈரான், ஆப்கானித்தான் ஆகிய இருநாடுகளிலும் ஓரளவு அறியப்பட்டவர்களாவர். 2003 இல் காலித் ஹுசைனி என்பவர் பதிப்பித்த புத்தகம் ஒன்று 1930 இல் இருந்து இன்றய தினம்வரையான, ஆப்கானித்தானில் நடந்த வரலாற்று, அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
 
கவிஞர்கள், எழுத்தாளர்களைவிடப் பல பாரசீக விஞ்ஞானிகளின் பூர்வீகம் பாரசீகமாக இருந்துள்ளது. இவர்களுள் குறிப்பிடத்தக்கவரான 'அவிசென்னா' என மேலை நாடுகளில் அறியப்பட்ட அபு அலி ஹூசைன் இப்னு சினா பல்க் பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். இப்னு சினா, இஸ்பகானில் மருத்துவக் கல்லூரி அமைத்தவரும், இன்றைய நவீன மருத்துவத்தின் தந்தையரில் ஒருவருமானவர். தற்போது பிரபலமான ஆங்கிலப் புத்தகங்களான Noah Gordon இன் The Physician இல் கூட இவர் பற்றிய தகவல்களைக் காணலாம். இந்தப் புத்தகம் இப்போது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வரிசை 376:
[[pa:ਅਫ਼ਗ਼ਾਨਿਸਤਾਨ]]
[[pag:Afghanistan]]
[[pam:AfghanistanAfganistan]]
[[pap:Afganistán]]
[[pdc:Afganischtaan]]
"https://ta.wikipedia.org/wiki/ஆப்கானித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது