பஞ்சவன்னத் தூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,467 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''பஞ்சவன்னத் தூது''' என்பது, யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்தில், [[இணுவில்]] பகுதியின் ஆட்சியாளனாக இருந்த கைலாயநாதன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுந்த ஒரு தூது வகை சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். பாட்டுடைத் தலைவனின் பெயரால் இந்நூல், "கைலாயநாதன் பஞ்சவனத் தூது" எனவும், "இளந்தாரி பஞ்சவன்னத் தூது" எனவும் பெயர் பெறுவது உண்டு. இந்நூலை எழுதியவர் யாழ்ப்பாண இராச்சியத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் இணுவிலில் வாழ்ந்த [[இணுவில் சின்னத்தம்பிப் புலவர்|சின்னத்தம்பிப் புலவர்]] ஆவார்.
 
==பாட்டுடைத் தலைவன்==
பாட்டுடைத் தலைவனான கைலாயநாதன், தமிழ்நாட்டின் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவனும், இணுவில் பேரூரின் ஆட்சியாளனாக இருந்தவனுமான "காலிங்கராயன்" என்பவனின் மகன் என்கிறது இந்நூல். 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தை அண்டி இலங்கையின் வடபகுதி [[பாண்டியர்|பாண்டியரின்]] கட்டுப்பாட்டில் இருந்தபோது இணுவிலுக்கான அவர்களின் பிரதிநிதியாகக் காலிங்கராயன் இருந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. காலிங்கராயனுக்குப் பின்னர் கைலாயநாதன் ஆட்சியாளன் ஆனான். நல்லரசு புரிந்து வந்த அவன் ஒரு நாளில் தனது மாளிகைக்கு அயலில் இருந்த புளிய மரம் ஒன்றில் ஏறி விண்ணுலகம் சென்றானாம். அதைக் கண்ட அவனது குடிமக்கள் வருந்தித் துதித்தபோது. கைலாயநாதன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து, அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்து மீண்டான் என்பது கதை. மக்களும் அவனுக்குக் கோயில் அமைத்து [[இணுவில் இளந்தாரி கோயில்|இளந்தாரி]] என்னும் பெயரால் வழிபட்டு வந்தனர். இந்த வழிபாடு இப்போதும் இப் பகுதியில் நிலவிவருகின்றது.
 
[[பகுப்பு:தூது (இலக்கியம்)]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1255482" இருந்து மீள்விக்கப்பட்டது