பஞ்சவன்னத் தூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
 
==நூல் அமைப்பு==
பஞ்சவன்னத் தூது நூலில், வெவ்வேறு நீளங்களில் அமைந்த 44 பாடல்கள் உள்ளன. இவற்றுள் முதல் எட்டுப் பாடல்கள் கடவுள் வாழ்த்தாக அமைந்துள்ளன. இறுதியில் 11 பாடல்கள் இளந்தாரி துதியாகவும், தொடர்ந்து வரும் இரண்டு பாடல்கள் வாழ்த்துப் பாடல்களாகவும் அமைந்துள்ளன. 9 ஆம் பாடல் முதல் 31 ஆம் பாடல் வரையிலான 23 பாடல்களே தூது நூல் வகையுள் அடங்குவன.
 
கடவுள் வாழ்த்துப் பாடல்கள் இணுவிலில் கோயில் கொண்டிருக்கும் கடவுளரைத் துதித்துப் பாடியவை. இக்கடவுளர், பரராசசேகரப் பிள்ளையார், சிவகாமியம்மை, சுப்பிரமணியர், வைரவர், பத்திரகாளி என்போர். இவர்களுடன் இளந்தாரிக்கும் துதிப் பாடல் ஒன்று உள்ளது. பரராசசேகரப் பிள்ளையார், சிவகாமியம்மன் ஆகிய கடவுளரின் துணை வேண்டி இரண்டு காப்புப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
 
நூலில் பின்வரும் தலைப்புக்களில் பாடல்கள் அமைக்கப்பட்டுள்ளன:
 
* கட்டியக்காரன் தோற்றம்
* கட்டியங் கூறுதல்
* இளந்தாரி திருவீதி உலா வருதல்
* கைலாயநாதனின் உலாக்காணச் சந்திரமோகினி வருதல்
* சந்திரமோகினி ஆற்றாமையுறல்
* சந்திரமோகினி காமவேளுக்கு முறையிடல்
* வெண்ணிலாவுக்கு முறையிடல்
* தென்றலைத் தூதாக வேண்டல்
* கிளிக்கு முறையிடலும் தூது வேண்டலும்
* அன்னத்தைத் தூதாக விடுத்தல்
* சந்திரமோகினியைத் தோழி உற்றது வினாதல்
* சந்திரமோகினி தோழிக்கு உற்றது உரைத்தல்
* சந்திரமோகினி தோழியைத் தூதாக வேண்டல்
* கைலாயநாதன் முன் தோழி கூறுதல்
* கைலாயநாதனிடம் தோழி சந்திரமோகினியின் குறை நேர்தல்
* இளந்தாரி அருள் புரிந்ததைத் தோழி சந்திரமோகினிக்குத் தெரிவித்தல்
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சவன்னத்_தூது" இலிருந்து மீள்விக்கப்பட்டது