பஞ்சவன்னத் தூது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
 
பொதுவான தூது நூல்களில் இருப்பதைப் போலன்றி இந்நூலில் பல பாடல்கள் [[இசை]]யுடன் பாடத் தக்கனவாக உள்ளன. இப் பாடல்களுக்கு [[இராகம்|இராகங்களும்]], [[தாளம்|தாளங்களும்]] கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், நூல் [[கட்டியக்காரன்]] தோற்றத்தோடு தொடங்குவதால் இது நாடகப் பாங்கு கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. இதனால், இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று தமிழும் இந்நூலில் உள்ளன.
 
==இளந்தாரி வழிபாடும் பஞ்சவன்னத் தூதும்==
இணுவிலில் இளந்தாரி வழிபாட்டில் பஞ்சவன்னத் தூது முக்கியமான இடம் பெறுகிறது. இளந்தாரி வழிபாட்டில் சித்திரைப் புத்தாண்டை அடுத்து வரும் முதல் செவ்வாய்க்கிழமை பொங்கல் பொங்கி மடை வைத்துச் சிறப்பாக வழிபடுவர். இரவில் பஞ்சவன்னத் தூது நூல் படித்தல் இடம்பெறும். இது இத் திருவிழாவின் முக்கியமான ஒரு நிகழ்வாக விளங்குகிறது. இதை மக்கள் கூடியிருந்து கேட்பர். சிறப்புப் பூசை நிகழ்த்தி, சடங்கு முறையாகப் படிப்பைப் பூசகர் தொடங்கி வைப்பார். முற்காலத்தில் படிப்பதற்காகப் பஞ்சவன்னத் தூது நூல் [[பனையோலை]] ஏட்டில் எழுதிக் கோயிலில் வைத்துப் பாதுகாத்து வந்தனர். அக்காலத்தில், கோயிலில் படிப்பதற்கான நூல்களை வீட்டில் வைத்துப் படிக்கலாகாது என நம்பினர். இதனால், எவரும் இதைப் படியெடுத்து வீட்டில் வைத்திருக்கும் வழக்கம் இருக்கவில்லை. இப் படிப்பின்போது பாடல்கள் இராகம், தாளத்தோடு [[இசைக் கருவி]]களும் முழங்கப் பாடப்படுவதால் அடியார்களின் ஆட்டமும் இடம்பெறுவது உண்டு.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பஞ்சவன்னத்_தூது" இலிருந்து மீள்விக்கப்பட்டது