"பஞ்சவன்னத் தூது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
பாட்டுடைத் தலைவனான கைலாயநாதன், தமிழ்நாட்டின் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவனும், இணுவில் பேரூரின் ஆட்சியாளனாக இருந்தவனுமான "காலிங்கராயன்" என்பவனின் மகன் என்கிறது இந்நூல். 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தை அண்டி இலங்கையின் வடபகுதி [[பாண்டியர்|பாண்டியரின்]] கட்டுப்பாட்டில் இருந்தபோது இணுவிலுக்கான அவர்களின் பிரதிநிதியாகக் காலிங்கராயன் இருந்திருக்கலாம் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. காலிங்கராயனுக்குப் பின்னர் கைலாயநாதன் ஆட்சியாளன் ஆனான். நல்லரசு புரிந்து வந்த அவன் ஒரு நாளில் தனது மாளிகைக்கு அயலில் இருந்த புளிய மரம் ஒன்றில் ஏறி விண்ணுலகம் சென்றானாம். அதைக் கண்ட அவனது குடிமக்கள் வருந்தித் துதித்தபோது. கைலாயநாதன் அவர்களுக்குக் காட்சி கொடுத்து, அவர்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பதாக உறுதியளித்து மீண்டான் என்பது கதை. மக்களும் அவனுக்குக் கோயில் அமைத்து [[இணுவில் இளந்தாரி கோயில்|இளந்தாரி]] என்னும் பெயரால் வழிபட்டு வந்தனர். இந்த வழிபாடு இப்போதும் இப் பகுதியில் நிலவிவருகின்றது.
 
கைலாயநாதன் வீதி உலா வரும்போது அவனைக் கண்ட சந்திரமோகினி என்பவள் அவன் மீது காதலுற்று [[வெண்ணிலா]], [[தென்றல்]], [[கிளி]], [[அன்னம்]] ஆகியவற்றைத் தூதனுப்ப முயல்கிறால்முயல்கிறாள். பின்னர் தனது தோழியைத் தூதாக அனுப்புகிறாள். தோழி சந்திரமோகினியின் நிலைமையைக் கைலாயநாதனுக்கு உரைத்து அவனது சம்மதம் பெறுவதே நூற்பொருளாக உள்ளது.
 
==நூல் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1258615" இருந்து மீள்விக்கப்பட்டது