இணுவில் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்க காலத்தில் [[இணுவில்]] பகுதியின் ஆட்சியாளனாகப் பேராயிரவன் என்பவன் நியமிக்கப்பட்டதாக [[யாழ்ப்பாண வைபவமாலை]] கூறுகிறது. இவனது வழி வந்த கனகராச முதலி என்பவன் பிற்காலத்தில் இப்பகுதியில் ஆட்சித் தலைவனாக விளங்கினான். இவன் காலத்திலேயே இணுவில் கந்தசாமி கோயில் தோற்றம் பெற்றதாகச் செவிவழிக் கதைகள் தெரிவிக்கின்றன. இவ்விடத்தில் முருக வழிபாடு தோன்றியது குறித்த கதை ஒன்று மக்களிடையே நிலவி வருகிறது.
 
 
:: ''"ஒரு நாள் இரவு கனகராச முதலியாரின் அரண்மணைப் பகுதியில் ஒரு ஒளிப்பிழம்பு தெரிவதை அவதானித்த அக்கிராம மக்கள் முதலியாரின் நெற்போர் தீப்பிடித்து எரிகின்றது எனக்கருதி அவரது அரண்மணையினை நோக்கி ஓடி வந்தனர். ஆனால் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. இந்த அதிசயத்திற்கான காரணத்தை முதலியாரிடம் வினாவிய போது அவர் சற்று முன் இரு பிராமணச் சிறுவர்கள் தன்னை அணுகி தாம் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் தம்மை ஆதரிக்குமாறு கூறி மறைந்து விட்டதாகவும் கூறினார். இது தனக்கும் தன் குடிமக்களுக்கும் அருள்பாலிக்கும் காஞ்சியம்பதி குமரகோட்டக் கந்தப்பெருமானின் அருள் என முதலியார் ஆனந்தமடைந்தார். திருவருள் சித்தத்திற்கு அமையத் தன் இல்லத்தில் கந்தனுக்கு குடிலொன்றை அமைத்து முதலியார் வழிபட்டார்."''
 
 
தற்போது இக்கோயிலுக்கு முன்னால் உள்ள முதலியாரடி எனப்படும் சிறு கோயில், மேற்சொன்ன கனகராச முதலியின் நினைவாக மக்கள் நடுகல் நாட்டி வழிபட்ட இடம் எனக் கருதப்படுகிறது. 1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போத்துக்கேயரிடம் வீழ்ச்சியடைந்த பின்னர் யாழ்ப்பாணத்துக் கோயில்கள் அனைத்தையும் இடித்து அழித்ததுடன், இந்துசமய வழிபாட்டுக்கும் தடை விதித்தனர். இதனால் கனகராச முதலியால் அமைக்கப்பட்ட கோயிலும் அழிந்து போனது. 1661 ஆம் ஆண்டில் வேலாயுதர் என்பவர் இதே இடத்தில் முருகனை வைத்து வணங்கி வந்ததார் என்று தெரிகிறது. இது தொடர்பிலும் ஒரு கதை உண்டு.
 
: "''பழங்குடிமகனான வேலாயுதரும், மனைவியும் முருகனிடத்தில் ஆராத அன்புடையவர்கள். அவர் ஒரு நாள் நித்திரையாக இருந்த பொழுது முருகப்பெருமான் கனவில் தோன்றி தான் காஞ்சியம்பதியில் இருந்து வருவதாகச் சொல்லி தனக்கு இல்லிடமொன்று அமைத்துத் தருமாறு கேட்டார். அதற்கு எங்கே அமைத்துத் தருவதென்று வேலாயுதர் வினவியதும் உமது வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி நாட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அமைக்கலாம் என்று கனவில் முருகப்பெருமான் கூறினார்."''
 
:: "''பழங்குடிமகனான வேலாயுதரும், மனைவியும் முருகனிடத்தில் ஆராத அன்புடையவர்கள். அவர் ஒரு நாள் நித்திரையாக இருந்த பொழுது முருகப்பெருமான் கனவில் தோன்றி தான் காஞ்சியம்பதியில் இருந்து வருவதாகச் சொல்லி தனக்கு இல்லிடமொன்று அமைத்துத் தருமாறு கேட்டார். அதற்கு எங்கே அமைத்துத் தருவதென்று வேலாயுதர் வினவியதும் உமது வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி நாட்டப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் அமைக்கலாம் என்று கனவில் முருகப்பெருமான் கூறினார்."''
: ''"மறுநாள் பொழுது புலர்ந்தது. என்ன அதிசயம்! வேலாயுதரின் வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி ஒன்று புதிதாய் நாட்டப்பட்டிருந்தது. கனவில் காட்சி தந்து இல்லிடம் கேட்டது முருகப்பெருமான் என்றே நம்பினார். முருகப்பெருமானின் திருக்குறிப்பை நிறைவேற்ற மனம் கொண்ட வேலாயுதர் தமது தோட்டத்தில் இருந்த மாட்டுக்குடிலை நொச்சித்தடி நடப்பட்டிருந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தார். கனவில் தோன்றிய முருகன் காஞ்சியம்பதி எனக் குறிப்பிட்டது காஞ்புரம் குமரகோட்டக் கந்தன் என்பதையும் உணர்ந்து கொண்டார்."''
 
:: ''"மறுநாள் பொழுது புலர்ந்தது. என்ன அதிசயம்! வேலாயுதரின் வெற்றிலைத் தோட்டத்தில் நொச்சித்தடி ஒன்று புதிதாய் நாட்டப்பட்டிருந்தது. கனவில் காட்சி தந்து இல்லிடம் கேட்டது முருகப்பெருமான் என்றே நம்பினார். முருகப்பெருமானின் திருக்குறிப்பை நிறைவேற்ற மனம் கொண்ட வேலாயுதர் தமது தோட்டத்தில் இருந்த மாட்டுக்குடிலை நொச்சித்தடி நடப்பட்டிருந்த இடத்தில் கொண்டு வந்து வைத்தார். கனவில் தோன்றிய முருகன் காஞ்சியம்பதி எனக் குறிப்பிட்டது காஞ்புரம் குமரகோட்டக் கந்தன் என்பதையும் உணர்ந்து கொண்டார்."''
 
 
அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் புராதன தல விருட்சமான நொச்சி மரம் கருவறைக்கருகில் தற்போதும் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது