இணுவில் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
<blockquote>''"அக்காலத்தில் வாழ்ந்த குழந்தையர் வேலாயுதர் என்பவரது கனவில் கந்தக் கடவுள் தோன்றித் தன்னை ஆதரிக்கும்படியும், தான் காஞ்சியில் இருந்து வந்ததாகவும் கூறி "உனது வெற்றிலைத் தோட்டத்தில் நாட்டப்பட்டுள்ள நொச்சிமரத்தடியில் காலால் மிதித்து அடையாளம் இட்டிருப்பேன்". அவ்விடமே எனது இருப்பிடம் எனக்கூறி மறைந்தார். அதிகாலை எழுந்த வேலாயுதர் தான் கண்ட கனவை எண்ணியவாறு வெற்றிலைத் தோட்டத்துக்குச் சென்றார். இது என்ன அதிசயம் கண்டது கனவல்ல நனவுதான் என உணர்ந்தார். பெருமான் உரைத்ததற்கு இணங்கப் புதிதாக ஒரு நொச்சிமரம் நாட்டப்பட்டு அருகில் பாதச் சுவடும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார். அவ்விடத்திற் குடிலமைத்து வேற்பெருமானை வணங்கி வந்தார்."'' <ref>சிவலிங்கம், மூ. 2004. பக். 41.</ref> </blockquote>
 
அதற்கமைய ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர் நொச்சியொல்லை மிதியன் என வழங்கப்படுவதுடன் புராதனஇன்று தலகருவறைக்கு விருட்சமானஅருகில் நொச்சிஇருப்பது மரம்மேற்சொன்ன நொச்சி கருவறைக்கருகில்மரமே தற்போதும்என்றும் உள்ளதுகருதப்படுகிறது.
 
ஊரவரும், அயலூர்களைச் சேர்ந்தவர்களும் இக்கோயிலுக்கு வந்து வணங்கினர். வேலாயுதரின் மகன் அருணாசலம் என்பவர் கோயிலில் வாக்குச் சொல்லி வந்ததால் அடியவர்களின் தொகையும் கூடிக்கொண்டே சென்றது. குடிலாக இருந்த கோயில் செங்கற் கட்டிடமாகக் கட்டப்பட்டுக் குடமுழுக்கும் செய்து வைக்கப்பட்டது. பூசைகளும், புராண படனம் போன்ற பல்வேறு சமய நிகழ்வுகளும் இக்காலத்தில் ஒழுங்காக நடைபெற்று வந்ததாகத் தெரிகிறது. 1840 ஆம் ஆண்டளவில் கோயில் வெள்ளைப் பொழி கற்களினால் கட்டி முடிக்கப்பட்டது.
நாளடைவில் அவரது வெற்றிலைத் தோட்டம் அடியார்கள் வழிபடும் வணக்கத்தலமாக மாறியது. அயலவர்களும், ஊர்மக்களும் அங்கு வந்து வழிபடுவதோடு பொங்கல், பூசைகளை நடாத்தி முருகனை வழிபட்டனர். முருகப்பெருமானின் திருவருளை நாடிவந்த அடியார்களுக்கு அருணாசலம் அவர்கள் வாக்குச் சித்தி கூறும் ஒரு சித்தரும் ஆனார். அடியார் தொகை அதிகரித்ததால், வேற்பெருமான் இருந்த மாட்டுக்குடிலை மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அவ்விடத்தில் செங்கற்கோவில் வேலை குறுகிய காலத்தில் நிறைவுற்றதும் வேலவரை அங்கு பிரதிஷ்டை செய்து கும்பாபிசேகம் நடைபெற்றது.
 
1891 ஆம் ஆண்டளவில் பெரிய சந்நியாசியார் என அழைக்கப்பட்ட ஆறுமுகம் சந்நியாசியார் இக் கோயில் திருப்பணிகளில் ஈடுபடலானார். இவரது முயற்சியினால், இக்கோயிலுக்காக மஞ்ச வாகனம் ஒன்றைச் செய்யும் பணிகள் 1910 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட சிற்ப வல்லுனர்கள் இப் பணியில் ஈடுபட்டனர். உலகப் பெருமஞ்சம் என ஊரவர்களால் குறிப்பிடப்படும் இப் புகழ் பெற்ற மஞ்சம் 1912 ஆம் ஆண்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது. வேறு அடியவர்களின் முயற்சியினால் 1905-1909 காலப்பகுதியில் கோயிலுக்காக மூன்று தளங்களைக் கொண்ட கோபுரமும் அமைக்கப்பட்டது. 1946 ஆம் ஆண்டளவில் [[மணிக்கோபுரம்|மணிக்கோபுரங்களையும்]] கட்டினர். 1967ல் கருவறைக்கு இரண்டு தளங்களைக் கொண்ட விமானம் அமைக்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டில் ஒரு புதிய சித்திரத் தேரும், 1977ல் புதிய சப்பறமும் இக் கோயிலுக்காக உருவாயின.
 
1953 ஆம் ஆண்டில் நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றையடுத்து இக் கோயில் பொதுக் கோயிலாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் பொது மக்களால் தெரிவு செய்யப்படும் குழுவினர் கோயிலின் நிர்வாகத்துக்குப் பொறுப்பாக இருந்து வருகின்றனர்.
 
== திருவிழா ==
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது