இணுவில் கந்தசுவாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 20:
 
== திருவிழாக்கள் ==
இக்கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை 25 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பெருந் திருவிழா இடம் பெறுகிறது. இதன் ஒரு பகுதியாக ஆனி அமாவாசைத் தினத்தில் தீர்த்தத் திருவிழா இடம்பெறும். கொடியேற்றத்துடன் தொடங்கும் இப்பெருந் திருவிழா 25 ஆம் நாளில் தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவடையும். ஒவ்வொரு நாளிலும் வெவ்வேறு வாகனங்களில் [[எழுந்தருளி]]களை வீதியுலாவாக எடுத்து வருவர். சில முக்கிய திருவிழாக்களினதும் அவை கொண்டாடப்படும் நாட்களினதும் விபரங்களைக் கீழே காண்க.
 
* முதல் நாள் - கொடியேற்றத் திருவிழா
* 12ம் நாள் - மஞ்சத் திருவிழா
* 16ம் நாள் - மாம்பழத் திருவிழா
* 22ம் நாள் - கைலாசவாகனத் திருவிழா
* 23ம் நாள் - வேட்டைத் திருவிழா / சப்பறத் திருவிழா
* 24ம் நாள் - தேர்த் திருவிழா
* 25ம் நாள் - தீர்த்தத் திருவிழா
 
இது தவிரக் கந்தசட்டிக் காலத்தில் ஆறு நாட்களும் திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. இந் நாட்களில் புராண படனம் இடம்பெறும். கந்தமுராணத்தின் [[சூரபன்மன் வதைப் படலம்|சூரபன்மன் வதைப் படலத்தை]] ஒருவர் வாசிக்க இன்னொருவர் அதற்கு பொருள் சொல்லிவருவார். இறுதி நாளில், முருகன் சூரனுடன் போர்புரிந்து அவனைக் கொல்லும் கதை நிகழ்த்திக் காட்டப்படும். இது [[சூரன்போர் (திருவிழா)|சூரன்போர்]]த் திருவிழா எனப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/இணுவில்_கந்தசுவாமி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது