கதிரவேலு சிற்றம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 31:
 
==அரசியலில்==
இலங்கையில் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் [[மாத்தறை]], [[அம்பாந்தோட்டை]] ஆகிய இடங்களுக்கு அரச அதிபராகவும் பணியாற்றினார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் [[மன்னார் தேர்தல் தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947, 1வது நாடாளுமன்றத் தேர்தலில்]] [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]]யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1948 இல் அன்றைய [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க]]வின் முதலாவது அரசில் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name="ts1"/><ref>{{cite web | url= http://www.atimes.com/ind-pak/CJ27Df05.html| title=India/Pakistan:Chapter 12: Tryst with independence| date= 2001-10-27 | publisher= ஆசியா டைம்சு|accessdate=2008-03-01}}</ref> சிறிது காலம் தொழிற்துறை, மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலிலும்]] சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]] மன்னார் தொகுதியில் போட்டியிட்டு [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] வேட்பாளர் [[[[வி. ஏ. அழகக்கோன்|வி. ஏ. அழகக்கோனிடம்]] தோற்றார்.
 
சிற்றம்பலம் தகவல்தொடர்பு அமைச்சராக இருந்த போது பல முக்கிய வானொலி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார். இவற்றில் [[பௌத்தம்|பௌத்த]] மக்களுக்காக பிரித் ஓதும் நிகழ்வை வானொலியில் அறிமுகப்படுத்தியமையைக் குறிப்பிடலாம்.<ref name="ts1"/> பல கிராமங்களில் உப அஞ்சல் நிலையங்களை ஆரம்பித்தார்.<ref name="ts1"/>
"https://ta.wikipedia.org/wiki/கதிரவேலு_சிற்றம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது