கதிரவேலு சிற்றம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
| nationality =
| religion = [[இந்து]]
| spouse = கமலாம்பிகை சிற்றம்பலம்
| spouse =
| party =
| otherparty =
வரிசை 26:
 
==ஆரம்ப காலம்==
சிற்றம்பலம் 1898 செப்டம்பர் 13 ஆம் நாள் பிறந்தவர். [[யாழ்ப்பாணம் (நகரம்)|யாழ்ப்பாணத்தின்]] பிரபலமான குடும்பம் ஒன்றில்பிறந்தவர். இவரது தந்தை ஆறுமுகம் கதிரவேலு குற்றவியல், மற்றும் மாவட்ட நீதிபதியாக இருந்தவர். தந்தையின் சகோதரர் [[ஆறுமுகம் கனகரத்தினம்]] யாழ்ப்பாணத்தின் முதல் நகரசபைத் தலைவராக இருந்தவர். [[கனகரத்தினம் மகா வித்தியாலயம்|கனகரத்தினம் மகா வித்தியாலயத்தை]]த் தோற்றுவித்தவர். சிற்றம்பலத்தின் தந்தைவழிப் பாட்டனார் [[விஸ்வநாதர் காசிப்பிள்ளை]] முடிக்குரிய வழக்கறிஞராகப் பணியாற்றியவர், [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.<ref name="ts1"/> சிற்றம்பலத்தின் சகோதரர் சி. பொன்னம்பலம் யாழ்ப்பாண நகரின் முதலாவது முதல்வராக இருந்தவர்.
 
ஆரம்பக் கல்வியை [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யில் கற்றார்.<ref name="ts1"/> ரோயல் கல்லூரியில் பயின்ற போது கல்லூரி இதழின் ஆசிரியராகவும், இலக்கியக் கழகத்தின் செயலாளராகவும் சேவையாற்றினார். [[கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தில்]] கணிதத்தில் பட்டமும் பெற்றார். இங்கிலாந்து மிடில் டெம்பிலில் [[பார் அட் லா|பாரிஸ்டரானார்]].<ref name="ts1"/>
 
சிற்றம்பலம் கமலாம்பிகை என்பவரைத் திருமணம் புரிந்தார். அர்ச்சுனா, தேவலட்சுமி பாலசுந்தரம் ஆகியோர் இவர்களுக்குப் பிறந்தவர்கள்<ref>[http://www.devalakshmi.itgo.com/ DEVALAKSHMI BALASUNDARAM]</ref>.
 
==அரசியலில்==
இலங்கையில் மாவட்ட நீதிபதியாகவும், பின்னர் [[மாத்தறை]], [[அம்பாந்தோட்டை]] ஆகிய இடங்களுக்கு அரச அதிபராகவும் பணியாற்றினார். அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் [[மன்னார் தேர்தல் தொகுதி]]யில் [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1947|1947, 1வது நாடாளுமன்றத் தேர்தலில்]] [[சுயேட்சை (அரசியல்வாதி)|சுயேட்சை]]யாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1948 இல் அன்றைய [[டொன் ஸ்டீபன் சேனாநாயக்க]]வின் முதலாவது அரசில் அஞ்சல், தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name="ts1"/><ref>{{cite web | url= http://www.atimes.com/ind-pak/CJ27Df05.html| title=India/Pakistan:Chapter 12: Tryst with independence| date= 2001-10-27 | publisher= ஆசியா டைம்சு|accessdate=2008-03-01}}</ref> சிறிது காலம் தொழிற்துறை, மற்றும் மீன்பிடித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1952|1952 தேர்தலிலும்]] சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1956|1956 தேர்தலில்]] மன்னார் தொகுதியில் போட்டியிட்டு [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]] வேட்பாளர் [[வி. ஏ. அழகக்கோன்|வி. ஏ. அழகக்கோனிடம்]] தோற்றார்.
 
சிற்றம்பலம் தகவல்தொடர்பு அமைச்சராக இருந்த போது பல முக்கிய வானொலி நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார். இவற்றில் [[பௌத்தம்|பௌத்த]] மக்களுக்காக பிரித் ஓதும் நிகழ்வை வானொலியில் அறிமுகப்படுத்தியமையைக் குறிப்பிடலாம்.<ref name="ts1"/> பல கிராமங்களில் உப அஞ்சல் நிலையங்களை ஆரம்பித்தார்.<ref name="ts1"/>. சிற்றம்பலத்தின் நினைவாக 2004 ஆம் ஆண்டில் இலங்கை அரசு அஞ்சல்தலையை வெளியீடுக் கௌரவப்படுத்தியது<ref>[http://www.dailynews.lk/2004/02/26/new18.html Stamp to honour Cathiravelu Sittampalam], டெய்லி நியூஸ், பெப்ரவரி 26, 2004</ref>
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கதிரவேலு_சிற்றம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது