பெரும்பெயர் வழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பாண்டியன் கருங்கை ஒள்வா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். [[இரும்பிடர்த் தலையார்]] என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 3</ref> ஈகைக்கடன் பூண்ட [[கவுரியர்]] வழிவந்தவன் என இவன் குறிப்பிடப்படுகிறான்.

[[மருந்தில் கூற்றம்]] என்னும் ஊரை இவன் கைப்பற்றினான். அப்போது அவன் யானையின் கழுத்தில் மணி கோத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் இருந்துகொண்டு மருந்தில் கூற்றத்துக் கதவுகளை யானைக்கோட்டால் உடைத்து முன்னேறி வென்றானாம். <ref>
பொன் ஓடைப் புகர் அணி நுதல்

துன் அருந்திறல் கமழ் கடாஅத்து

எயிறு படையாக எயில் கதவு இடாஅக்

கயிறு பிணி கொண்ட கவிழ் மணி மருங்கின்

பெருங்கை யானை இரும்பிடர்த் தலை இருந்து

மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்

கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி (புறநானூறு 3)</ref>

இவனது மனைவியின் கற்பும், பதுக்கையுடன் கூடிய இவனது கோட்டை மதிலின் சிறப்பும் பாடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/பெரும்பெயர்_வழுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது