நன்றி தெரிவித்தல் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sco:Thanksgiving
சி சேர்க்கை
வரிசை 12:
 
இது கனடாவில் [[அக்டோபர்]] மாதத்தின் இரண்டாம் திங்களன்றும், [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[நவம்பர்]] மாதத்தின் நான்காம் வியாழனன்றும் கொண்டாடப்படுகிறது.
 
==இந்நாளின் பன்முக வெளிப்பாடு==
இன்று ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படுகின்ற "நன்றி தெரிவித்தல் நாள்" அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. விடுமுறை நாள் என்னும் விதத்தில் இந்நாள் ஒரு குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நீண்ட தூரம் பயணம் செய்து தம் பெற்றோர், உடன்பிறப்புகளோடு சேர்ந்து விழாக் கொண்டாடுகின்றனர்.
 
இந்நாளில் மக்கள் உண்ணும் விருந்தில் சில உணவுகள் மரபுவழி சமையல் செய்யப்படுகின்றன. வான்கோழியை முழுக் கோழியாக வைத்து அவித்தல், வறட்டியெடுத்தல், பொரித்தல் போன்ற வகைகளில் சமைப்பர். குடல் பகுதியை நீக்கிவிட்டு, அதில் அப்பத்துண்டுகள் மற்றும் மூலிகைகள் கொண்ட கலவையை வைத்திருப்பர். வான்கோழி இறைச்சி தவிர மக்காச் சோளம் அவித்து உண்ணப்படும். மேலும், கிரான்பெரி என்னும் பழங்களைக் கலவையாக்கி உணவோடு அருந்துவர். அமெரிக்க பூசணியிலிருந்து செய்யப்படும் கேக் உண்ணுவதும் வழக்கம்.
[[Image:John F. Kennedy, turkey pardon.jpg|thumb|left|அமெரிக்க முதல்வர் வான்கோழியை "மன்னித்தல்": ஜான் எப். கென்னடி (1963). இவ்வழக்கம் 1985இலிருந்து தொடர்கிறது.]]
நன்றி தெரிவித்தல் நாளில் நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதுண்டு. முக்கியமான போட்டிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். குறிப்பாக அமெரிக்க கால்பந்தாட்டம் என்று அழைக்கப்படும் விளையாட்டு பிரபலமானது.
 
சமயத்தைப் பொறுத்தமட்டில், அமெரிக்காவில் பல இடங்களில் கோவில் வழிபாடுகளில் நன்றி மன்றாட்டுகள் இடம்பெறும். மனித வாழ்விலும் வரலாற்றிலும் இறைவன் மக்களுக்குச் செய்துள்ள, தொடர்ந்து செய்துவருகின்ற நன்மைகளுக்கு மக்கள் நன்றிசெலுத்துவர்.
 
==அரசியல் சார்ந்த பொருள்==
அரசியல் பின்னணியில், இவ்விழா மக்களிடையே நல்லுறவை வளர்க்க பயன்படுவதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் முதற்குடிகளும் ஐரோப்பிய குடியேற்றத்தவரும் தமக்குள்ளே மோதலில் ஈடுபடாமல் நல்லுறவைப் பேணுவதன் தேவையும் இவ்விழாவின் ஒரு பொருளாக உள்ளது.
 
==நாட்டு முதல்வர் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கல்==
இவ்விழாவைச் சார்ந்த இன்னொரு வழக்கம் அமெரிக்க முதல்வர் தமது இல்லமாகிய வெள்ளை மாளிகையில் இரண்டு வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கு ஆகும். அமெரிக்க குடும்பங்களில் பல்லாயிரக் கணக்கான வான்கோழிகள் இவ்விழாவை முன்னிட்டுக் கொல்லப்படுவதால், அவ்வாறு "கொலைத் தண்டனை" பெறுவதிலிருந்து தப்பித்துப் பிழைக்கின்ற இரண்டு வான்கோழிகள் நாட்டிலுள்ள விலங்குக் காப்பகங்களுக்குப் பரிசாக அளிக்கப்படும். இவ்வாறு அவை சாவிலிருந்து தப்புகின்றன.
 
==2012ஆம் ஆண்டு கொண்டாட்டம்==
ஐக்கிய அமெரிக்காவில் 2012இல் நவம்பர் 22, வியாழனன்று நன்றி தெரிவித்தல் நாள் கொண்டாடப்படுகிறது.
 
 
[[பகுப்பு:கனடாவின் சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நன்றி_தெரிவித்தல்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது