பட்டாம்பூச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 35:
[[Image:Ariadne merione egg sec.jpg|thumb|left|''அரியாட்னி மெரியோன்'' (Ariadne merione) என்னும் பூச்சியின் முட்டைகள்]]
பட்டாம்பூச்சியின் முட்டைகள் பல அளவிலும் வடிவிலும் நிறத்திலும் காணப்படுவன. சில நம் கண்ணுக்கே தெரியாத மிகச்சிறியனவாயும், சில 2.5 மில்லி [[மீட்டர்]] வரையிலும் உள்ளன. பெரும்பாலானவை மஞ்சள் அல்லது இளம்பச்சை நிறத்தில் சிறு உருண்டை, நீளுருண்டை முதலிய வடிவங்களில் இருப்பவை. சில மழு மழுப்பாகவும், சில சொரசொரப்பாகவும், சில வரிகள் உடையதாகவும் இருக்கும். பெண் பட்டாம்பூச்சிகள் தம்முட்டைகளைப் பெரும்பாலும் பின்னர் முட்டையிலிருந்து பொரிக்கும் புழுவுக்கு உணவாக அமையக் கூடிய இலைகளில் இடுகின்றன. முட்டையை இடும்முன் முட்டையில் உள்ள சிறு துளை வழியாக தான் புணர்ந்தபொழுது கிடைத்த விந்துகளை இத்துளையில் இடுகின்றன. பின்னர் [[கோந்து]] போன்ற ஓர் ஒட்டும் நீர்மத்தால் முட்டைகளை ஒன்றாக ஒட்ட வைக்கின்றன. சில முட்டைகள் சில நாட்களிலேயே பொரிக்கின்றன. சில பொரிப்பதற்கு பல மாதங்கள் கடக்கின்றன. முட்டையில் இருந்து வெளி வரும் புழு தன் உணவைத் தானேதான் தேர்ந்து உண்ணவேண்டும்.
[[File:Amata alicia.JPG|thumb|right| Amata alicia என்னும் பூச்சி முட்டையிட்டுக் கொன்டிருக்கிறது. ]]
<br />
 
"https://ta.wikipedia.org/wiki/பட்டாம்பூச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது