சிலுவையின் புனித யோவானின் கிறித்து (ஓவியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fr:Christ de Saint Jean de la Croix
சி r2.7.3) (Robot: Modifying fr:Christ de Saint Jean de la Croix to fr:Christ de saint Jean de la Croix; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 18:
'''சிலுவையின் புனித யோவானின் கிறித்து''' (''Christ of Saint John of the Cross'') என்பது எசுப்பானியக் கலைஞரான [[சால்வதோர் தாலீ]] (1904-1989) என்பவர் 1951இல் உருவாக்கிய புகழ்மிக்க ஓவியம் ஆகும்.
 
== தனிப் பண்புடைய ஓவியத்தின் பின்னணி ==
 
இந்த ஓவியம் சிலுவையில் தொங்கும் [[இயேசு கிறித்து|இயேசு கிறித்துவை]] ஒரு தனிப் பார்வையில் சித்தரிக்கிறது. இயேசு தொங்குகின்ற சிலுவை மேலே உயர்த்தப்பட்டுள்ளது. அதன் கீழே ஒரு நீர்த்தேக்கம், அதில் மீனவர்களோடு கூடிய ஒரு படகு, மேலே இருண்ட வானம்.
வரிசை 26:
மேலும், இயேசுவும் அவர் தொங்குகின்ற சிலுவையும் நேரே செங்குத்தாக இல்லாமல் கீழே சாய்ந்து விழுவதுபோன்று மிகைப்படுத்திய ஒரு கோணத்தில் காட்டப்படுவதும் தாலீ கனவில் கண்டதாகக் கூறுகிறார்.
 
== ஓவியத்தின் பெயர்த் தோற்றம் ==
[[Fileபடிமம்:John of the Cross crucifixion sketch.jpg|thumbnail|இயேசு சிலுவையில் தொங்குவதை வரைபடமாகக் காட்டிய [[சிலுவையின் புனித யோவான்]] என்பவரின் இப்படைப்பு சால்வதோர் தாலீயின் படைப்பாக்கத்திற்குத் தூண்டுதலாக அமைந்தது.]]
 
16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கார்மேல் சபைத் துறவியான [[சிலுவையின் புனித யோவான்]] என்னும் புனிதர், இயேசு சிலுவையில் தொங்குவதை ஒரு வரைபடமாக ஆக்கினார். அதில் இயேசுவின் உடல் சிலுவையோடு ஒட்டியிராமல் தனியே பிரிந்து நிற்பதுபோலக் காட்டப்பட்டது. இதுவே தாலீயின் ஓவியத்துக்கு ஒரு தூண்டுதலாயிற்று.
வரிசை 33:
தாலீ வரைந்த ஓவியத்தில் ஒரு முக்கோணமும் ஒரு வட்டமும் தெளிவாகத் தெரிகின்றன. இயேசுவின் விரிந்த இரு கைகளும் வீழ்கின்ற தலையும் மூன்று கோணங்களைக் காட்டுகின்றன. இயேசுவின் தலை ஒரு வட்டமாக உள்ளது. மூன்று கோணங்கள் கடவுள் மூவொரு இறைவனாக உள்ளார் என்பதை அடையாள முறையில் குறிப்பதாகவும், வட்ட வடிவில் உள்ள இயேசுவின் தலை, பிளேட்டோ குறிப்பிடுகின்ற முழுமையின் அடையாளமான வட்டம் என்னும் வடிவமாக இருக்கக்கூடும் எனவும் ஒரு விளக்கம் உள்ளது.<ref>Gaultier, Alyse. ''The Little Book of Dali''. Paris: Flammarion, 2004.</ref>
 
== தாலீ ஓவியமும் அவர் கண்ட கனவும் ==
இந்த ஓவியத்தை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தவற்றைக் குறிப்பிட்டபோது தாலீ பின்வருமாறு கூறினார்:
<blockquote>"1950இல் நான் ஒரு கனவு கண்டேன். அது ஒரு பிரபஞ்சக் கனவு. அதில் நான் இயேசு சிலுவையில் தொங்குகின்ற காட்சியை நிறங்களில் கண்டேன். அது எனது கனவில் அணுவின் கருவாகத் தோன்றியது. அக்கரு பின்னர் மீஇயற்பு விரிவில் பரந்தது. அதை நான் பரந்து விரிந்த இப்பிரபஞ்சத்தின் ஒன்றிப்பாகக் கண்டேன். அதுவே அகண்ட கிறித்துவாக உருப்பெற்றது"<ref>Descharnes, Robert. ''Dali''. New York: Harry N. Abrams, Inc., 2003.</ref></blockquote>
 
== கிறித்து தொங்கும் வீழ்கோணம் ==
தாலீ உருவாக்கிய கிறித்து சிலுவையிலிருந்து கீழே விழுவதுபோன்று தொங்குகிறார். தாம் கண்ட கனவுக்காட்சி அதுவே என்று தாலீ கருதியதால் அந்த வீழ்கோணத்தைச் சரியாகக் கற்பனை செய்வதற்காக ஹாலிவுட் வீரசாகச நடிகர் ரசல் சோண்டர்சு (''Russell Saunders'') என்பவரின் உதவியை நாடினார். தலைக்குமேல் உயர்த்தி எழுப்பப்பட்ட உத்தரத்தில் மேலிருந்து கீழ்நோக்கி அந்த நடிகர் தொங்கவிடப்பட்டார். அவ்வாறு தொங்கிய மனித உருவத்தைப் பொருத்தமான கோணத்திலிருந்து நோக்கிய தாலீ அந்தக் கோணத்திலேயே இயேசு சிலுவையில் தொங்குவதாக ஓவியத்தில் காட்டுகிறார். <ref name=BBC />
 
== ஓவியத்தின் பின் வரலாறு ==
 
தாலீ வரைந்த கிறித்து ஓவியத்தையும் அதற்கான உடைமை உரிமையையும் கிளாசுகோ நகரக் கலைகூடத்தின் இயக்குநர் டாம் ஹனிமேன் (''Tom Honeyman'') என்பவர் 1950களில் வாங்கினார். அதற்கு அவர் கொடுத்த விலை 8,200 பவுண்டுகள் ஆகும். பட்டியலில் குறிக்கப்பட்ட விலையாகிய 12,000 பவுண்டை விடவும் அவர் கொடுத்த விலை குறைவாக இருந்த போதிலும், அது அதிகமாகவே கருதப்பட்டது. ஆனால், உடைமை உரிமையும் கூடவே வாங்கப்பட்டதால், பின்வந்த ஆண்டுகளில் கிளாசுகோ கலைக்கூடம் செலவழித்த பணத்தைவிட பன்மடங்கு பணத்தை இலாபமாக ஈட்டியது. <ref name=AKN>{{cite web|title=Salvador Dali's 'Christ of St John of the Cross' Scotland's Favorite|url=http://www.artknowledgenews.com/Salvador_Dali-Christ_of_St_John_of_Cross-Scotland.html|work=Art Knowledge News|accessdate=6 April 2012}}</ref>
வரிசை 56:
இசுக்காத்துலாந்தின் மிகப்புகழ்பெற்ற ஓவியம் தாலீயின் கிறித்து ஓவியமே என்று 2006இல் 29% பேர் தீர்ப்பளித்தனர்.<ref>[http://www.glasgowmuseums.com/showNews.cfm?venueid=0&itemid=336 "Salvador Dali's 'Christ of St John of the Cross' Wins Herald Poll"], GlasgowMuseums.com, August 30, 2005.</ref>
 
== ஓவியம் பற்றிய விமரிசனங்கள் ==
சால்வதோர் தாலீ வரைந்த "சிலுவையின் புனித யோவானின் கிறித்து" என்னும் ஓவியம், கிறித்துவைச் சிலுவையில் சித்தரிக்கின்ற மரபு ஓவியங்களிலிருந்து மாறுபட்டது என்பதால் அதுபற்றிப் பல விமரிசனங்கள் எழுந்தன. தாலீ ஏற்கெனவே [[அடிமன வெளிப்பாட்டியம்]] (''Surrealism'') என்னும் கலைப்பாணியில் [[நீங்கா நினைவு]] போன்ற பல ஓவியங்களை உருவாக்கியிருந்ததால், அவர் சமயம் தொடர்பான ஒரு படைப்பை உருவாக்கியது அதிர்ச்சியாக இருந்ததாக சில கலை விமர்சகர்கள் கூறினர்.<ref name=AKN />
 
2009இல், "கார்டியன்" (''The Guardian'') என்னும் இலண்டன் நகர நாளிதளின் கலை விமர்சகரான ஜானத்தன் ஜோன்சு (''Jonathan Jones'') என்பவர் தாலீயின் கிறித்து ஓவியம் "கீழ்த்தரமான, கலையழகற்ற" படைப்பு என்றார். ஆயினும், "நல்லதாயினும் தீயதாயினும், அந்த ஓவியம் கிறித்து சிலுவையில் தொங்கும் காட்சியாக 20ஆம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்களுள் நீடித்த புகழ்கொண்டதாக உள்ளது" என்று கூறினார்."<ref name=Guardian>{{cite news|last=Jones|first=Jonathan|title=Kitsch and lurid but also a glimpse of a strange soul|url=http://www.guardian.co.uk/artanddesign/2009/jan/27/salvador-dali-art-design-scotland1|newspaper=The Guardian|date=27 January 2009}}</ref>
 
== ஓவியத்தை விலைக்கு வாங்க எசுப்பானிய முயற்சி ==
எசுப்பானியக் கலைஞராகிய சால்வதோர் தாலீயின் தலைசிறந்த படைப்பாகிய கிறித்து ஓவியம் மீண்டும் எசுப்பானிய நாட்டுக்குத் திரும்புவதே முறை என்று எண்ணிய எசுப்பானிய அரசு அந்த ஓவியத்தை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது.
 
127 மில்லியன் டாலர் கொடுத்து ஓவியத்தை விலைக்குக் கேட்டது எசுப்பானிய அரசு. ஆனால் எசுக்காத்துலாந்து நாட்டுக் கலைக்கூடம் அதை விற்க முடியாது என்று கூறிவிட்டது.<ref name="Ross2006">{{Cite document|url=http://findarticles.com/p/articles/mi_qn4156/is_20060702/ai_n16532511|title=Palace of dreams — That's how Kelvingrove was described ... |publisher=The Herald (Glasgow)|date=July 2, 2006 | first=Peter | last=Ross|postscript=<!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->}}</ref>
 
== ஆதாரங்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:1950களில் ஓவியங்கள்]]
[[பகுப்பு:இயேசு]]
வரி 73 ⟶ 74:
[[en:Christ of Saint John of the Cross]]
[[es:Cristo de San Juan de la Cruz]]
[[fr:Christ de Saintsaint Jean de la Croix]]
[[it:Cristo di San Juan de la Cruz]]
[[nl:De Christus van de Heilige Johannes van het kruis]]