சுந்தரம் பாலச்சந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 43:
 
==திரைப்படங்கள்==
1932ஆம் ஆண்டில் ஒரு குழந்தை நட்சத்திரமாக பிரபாத் கம்பனியின் [[சீதா கல்யாணம் (திரைப்படம்)|சீதா கல்யாணம்]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது தந்தை சனகராகவும், தமையன் ராஜம் இராமராகவும், தமக்கை ஜெயலட்சுமி சீதையாகவும், தமக்கை சரசுவதி ஊர்மிளையாகவும் நடித்திருந்தனர். பாலச்சந்தர் இதில் இராவணனின் அரண்மனையில் கஞ்சிரா வாசிப்பவராகத் தோன்றினார். தொடர்ந்து "ரிஷயசிருங்கர்" (1934), "ஆராய்ச்சிமணி அல்லது மனுநீதிச் சோழன்" (1942) திரைப்படங்களில் நடித்தார். அவர் நடித்த பிற தமிழ் திரைப்படங்கள்: ''தேவகி'' (1951), ''ராஜாம்பாள்'' (1951), ''ராணி'' (1952), ''இன்ஸ்பெக்டர்'' (1953), ''பெண்'' (1954), ''கோடீஸ்வரன்'' (1955), ''டாக்டர் சாவித்திரி'' (1955) மற்றும் ''மரகதம்'' (1959).
 
திரைப்படங்களில் நடித்ததுடன் 1960களின் மையக்காலங்கள் வரை திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். ''இது நிஜமா'' (1948), ''என் கணவர்'' (1948), ''கைதி'' (1951), ''அவனா இவன்?'' (1962), ''[[பொம்மை]]'' (1964) மற்றும் ''நடு இரவில்'' (1965) போன்ற திரைப்படங்களில் நடிப்பு, இசை, பின்னணி பாடகர், இயக்கம் என பல துறைகளில்ம் பங்களித்திருந்தார். அவர் இயக்கிய [[அந்த நாள்]] (1954) எந்தவொரு பாடலுமின்றி ஓர் முன்னோடித் திரைப்படமாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரம்_பாலச்சந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது