பூமிபுத்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஒரு நாட்டிலோ அல்லது ஓர் இடத்திலோ தோன்றிய பூர்வக் குடியினரை பூமிபுத்திரா என அழைக்கலாம். இந்தச் சொல் மலேசிய நாட்டில் தோன்றிய பூர்வக் குடியினரைச் சுட்ட பயன்படுத்தப்பட்டு வருகின்றது.<ref>[http://en.wikipedia.org/wiki/Bumiputra/ Bumiputra is a Malaysian term to describe Malay race and the indigenous peoples of Southeast Asia in Malaysia.]</ref> தீபகற்ப மலேசியாவிலும், கிழக்கு மலேசியாவிலும் தோன்றிய பூர்வக் குடியினர், மற்றும் மலாய்க்காரர்களைப் பூமிபுத்திரா என்று அழைக்கின்றனர். இச்சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றியது. (பூமி=உலகம்/மண், புத்திரா=மகன்). அதாவது மண்ணின் மைந்தர்கள் என பொருள் கொள்ளலாம்.
 
'''''Bumiputra''''' என்பது ஒரு சமஸ்கிருதச் சொல்லாக இருந்தாலும், மலாய் மொழியில் இப்போதைக்கு ஒரு வழக்குச் சொல்லாகிவிட்டது. அந்தச் சொல்லை 'பூமிபுத்ரா' என்றுதான் மலேசியாவில் அழைக்கிறார்கள். 1969 மே மாதம் 13ஆம் தேதி மலேசியாவில் ஓர் இனக்கலவரம் நடைபெற்றது. அதை [[மே 13 கலவரம்]] என்று அழைக்கிறார்கள். பொதுவாக, மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையே நிலவிய பொருளாதாரப் பாகுபாடுகளே அந்தக் கலவரத்திற்கு மூல காரணம் என்று கருதப்படுகிறது.
 
===புதுவாதக் கொள்கை===
 
இந்தக் கலவரத்தில் இந்தியர்களும் பெருமளவில் பாதிப்பு அடைந்தனர். மலாய்க்காரர்கள் மற்ற எல்லா இனங்களையும்விட முன்னேற்றம் அடைய வேண்டும் எனும் ஒரு புதுவாதக் கொள்கையை 1970களில் அரசாங்கம் அறிமுகம் செய்தது. மலாய்க்காரர்களுக்கு கூடுதலான பொருளாதார வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று பல்வேறான தீவிரப் பொருளாதாரக் திட்டங்களை அமல்படுத்தியது. அந்தக் கட்டத்தில் மலாய்க்காரர்களுக்கும், மலேசியப் பூர்வீகக் குடிமக்களுக்கும் ‘பூமிபுத்ரா’ எனும் அந்தஸ்து வழங்கப்பட்டது.
 
அரசாங்கத்தின் அந்தப் புதுவாதக் கொள்கையினால் நகர்ப்புறங்களில், புற நகர்ப்புறங்களில் வாழ்ந்த மத்தியத் தர மலாய்க்காரர்கள் மட்டுமே மிகைப் பலன் அடைந்தனர். கிராமப்புற மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஏழ்மையிலேயே இருந்தனர். இருந்தும் வருகின்றனர். இந்தப் புதுவாதக் கொள்கை இந்தியர்களைப் பெரும் அளவில் பாதித்தது. இண்ட்ராப் எனும் இந்து உரிமைகள் போராட்டக் குழு உருவானதற்கும் அந்தப் புதுவாதக் கொள்கையே காரணமாகும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பூமிபுத்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது