சுந்தரம் பாலச்சந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 35:
பாலச்சந்தர் [[தஞ்சாவூர்|தஞ்சாவூரின்]] ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவர்களது பூர்வீகம் [[நன்னிலம்]] [[தாலுகா|வட்டத்தில்]] உள்ள [[ஸ்ரீவாஞ்சியம்]] கிராமம் ஆகும். தந்தை சுந்தரம் ஐயர் [[சென்னை]]க்கு வந்து சட்டப் படிப்பை முடித்த பின்னர் [[மைலாப்பூர்|மைலாப்பூரில்]] வக்கீலாகத் தொழில் பார்த்து அங்கேயே குடியேறி விட்டார். சென்னையிலேயே பாலச்சந்தர் பிறந்தார். பாலச்சந்தரின் அண்ணன் [[சு. ராஜம்|ராஜமும்]] புகழ்பெற்ற கருநாடக இசைக் கலைஞரும் ஓவியருமாவார். இவரது அக்காள் ஜயலட்சுமி [[சிவகவி]] என்ற திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] உடன் நடித்துள்ளார். இவருக்குப் பின்னர் சரசுவதி என்ற பெண்ணும் கல்பகம், கோபாலசாமி என்ற இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன.
 
தமது ஐந்தாவது அகவையிலிருந்தே கருநாடக இசையில் நாட்டம் கொண்டார். [[கஞ்சிரா]] பயின்ற பாலச்சந்தர் விரைவிலேயே தமது அண்ணன் மற்றும் பிற இசைக்கலைஞர்களுக்கு பக்க வாத்தியமாக இசைக்கத் துவங்கினார். பின்னர் [[வீணை]], [[தபேலா]], [[மிருதங்கம்]], [[ஆர்மோனியம்]], [[புல்புல்தாரா]], [[தில்ருபா]], [[சித்தார்][] மற்றும் [[செனாய்]] இசைக்கருவிகளைக் கற்றார்.
 
பாலச்சந்தர் [[1953]] ஆம் ஆண்டில் சாந்தா என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு இராமன் என்ற மகன் உள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/சுந்தரம்_பாலச்சந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது