இசுபிங்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Egypt.Giza.Sphinx.01.jpg|thumb|250px|ஸ்ஃபிஙஸ்]]
'''ஸ்ஃபிங்ஸ்''' (Sphinx) என்பது, [[சிங்கம்|சிங்கத்தின்]] உடலும், [[செம்மறி ஆடு]], [[கழுகுவல்லூறு]], [[மனிதன்]] ஆகியவற்றுள் ஒன்றின் தலையுடனும் கூடிய ஒரு உருவத்தைக் குறிக்கும். இது பண்டைய எகிப்தியர்களின் பழைய அரசுக்காலத்து உருவாக்கமாக இருந்தாலும், பண்பாட்டுத் தொடர்புகளினால் கிரேக்கத் [[தொன்மம்|தொன்மங்களிலும்]] இடம் பெற்றுள்ளது.
 
==எகிப்திய ஸ்ஃபிங்ஸ்==
 
எகிப்திய ஸ்ஃபிங்ஸ் தொன்மம் சார்ந்த கற்பனைப் பிராணிகள் ஆகும். எகிப்திய சிற்ப மரபில் இவை காவலுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. ஸ்ஃபிங்ஸ்கள் மூன்று விதமான வடிவங்களில் காணப்படுகின்றன.
 
# '''அண்ட்ரோ ஸ்பிங்ஸ்கள்''': இவை சிங்க உடலும் மனிதத் தலையும் கொண்டவை.
# '''கிரியோ ஸ்பிங்ஸ்''': சிங்க உடலும் செம்மறியாட்டுத் தலையும் கொண்டு அமைந்தவை.
# '''ஹையெரொகோ ஸ்ஃபிங்ஸ்''': சிங்க உடலும் வல்லூறு அல்லது [[பருந்து|பருந்தின்]] தலையும் கொண்டவை.
 
எகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான ஸ்ஃபிங்ஸ்கள் [[கீசா]]வில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து உள்ளதாகும். இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. [[கீசாவின் பெரிய ஸ்ஃபிங்ஸ்|கீசாவின் பெரிய ஸ்ஃபிங்ஸின்]] தலை எகிப்திய [[ஃபாரோ]]வான [[கஃப்ரா]] (Khafra) என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெஃப்ரா (Djedefra) என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் இது நாலாம் மரபுவழிக் (கி.பி. 2723 - கி.மு. 2563) காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இதன் கட்டுமானத்தை இன்னும் பழைய காலத்துக்குத் தள்ளும் [[எடுகோள்]]களும் உள்ளன.
 
[[பகுப்பு:எகிப்து]]
"https://ta.wikipedia.org/wiki/இசுபிங்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது