ஊட்டக்கூறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஊட்டக்கூறு (Nutrient) என்பது [[உயிரினம்|உயிரினங்கள்]] உயிர் வாழ்வதற்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு வகை வேதிப்பொருள் ஆகும். உயிரினங்கள் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக் கொள்வதற்காக நிகழ்த்தும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] செயல்முறையில் பயன்படுத்த, தமது சூழலில் இருந்து பெற்றுக் கொள்ளும் வேதிப்பொருட்கள் எனக் கொள்ளலாம்<ref name=WhitneyRolfes2005>Whitney, Elanor and Sharon Rolfes. 2005. ''Understanding Nutrition, 10th edition'', p 6. Thomson-Wadsworth.</ref>. இவ்வகையான ஊட்டக்கூறுகளின் தொகுப்பு [[ஊட்டச்சத்து|போசாக்கு]] என அழைக்கப்படும். பல நேரங்களில் ஊட்டக்கூறு (Nutrient), போசாக்கு (Nutrition) இரண்டுமே ஊட்டச்சத்து என்ற சொல்லினால் பொது வழக்கில் அழைக்கப்படுகின்றது.
 
உயிரினங்களில் [[இழையம்|இழையங்கள்]] கட்டமைக்கப்படவும், அவற்றை தேவைக்கேற்ப புதுப்பித்துக் கொள்ளவும், உயிரினங்களில் நிகழும் அனைத்து உடற் தொழிற்பாடுகளுக்கும் தேவையான ஆற்றலைப் பெறுவதற்கும் வெவ்வேறு வகையான ஊட்டக்கூறுகள் அவசியமாகின்றது. வேறுபட்ட உயிரினங்கள் தமக்குத் தேவையான ஊட்டக்கூறுகளை வெவ்வேறு வழிமுறைகளில் பெற்றுக் கொள்கின்றன. [[தாவரம்|தாவரங்கள்]] பொதுவாக தமது [[வேர்]]களினூடாக, [[மண்]]ணில் அல்லது [[நீர்|நீரில்]] இருந்து தமது ஊட்டக்கூறுகளைப் பெற்றுக் கொள்கின்றன. [[விலங்கு]]கள் உட்கொள்ளல் செயல் மூலம் தமது ஊட்டக்கூறுகளைப் பெற்றுக் கொள்கின்றன.
 
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஊட்டக்கூறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது