"முதுமை மூட்டழற்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,658 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''முதுமை மூட்டழற்சி''' [Osteoarthritis, (OA)], '''சிதையும் [[மூட்டு]] [[நோய்]]''', '''சிதையும் வாதம்''' அல்லது '''அத்திமூட்டுநோய்''' என்றழைக்கப்படுபவை மூட்டுச் [மூட்டுக்குருத்து (articular cartilage), அடிக்குருத்தெலும்பு (subchondral bone) ஆகியவையும் சேர்ந்த] சிதைவுகளைக் கொண்ட, இயக்க (அசைவு) முறைபிறழ்வுகளினால் ஏற்படும் நோய்தொகுதியைக் குறிக்கின்றன<ref>{{DorlandsDict|six/000076356|osteoarthritis}}</ref>. மூட்டு [[வலி]], மிருதுத்தன்மை, [[விறைப்பு]], மூட்டுப்பிடிப்பு (Joint locking), சில நேரங்களில் மூட்டு நீர்மக்கட்டு (joint effusion) ஆகியவை இந்நோய்க்கு அறிகுறிகளாகும். [[மரபுவழி]] (பரம்பரை), வளர்ச்சி, [[வளர்சிதைமாற்றம்]], [[விசையியல்]] சார்ந்தவையென பல்வேறு காரணங்கள் [[கசியிழையம்|கசியிழைய]] அழிவிற்கானச் செயல்முறைகளைத் தொடங்கலாம். இத்தகு சிதைந்த கசியிழையம் [[எலும்பு|எலும்பின்]] மேற்பகுதிகளை சரியாகப் பாதுகாக்காதபோது, எலும்புப் பகுதிகள் வெளிப்பட்டு சேதமடைகின்றன. [[வலி|வலியினால்]] அசைவது குறைந்துவிடுவதால், எலும்புகளைச் சுற்றியுள்ள [[தசை|தசைகள்]] தொய்வடைந்து செயல்திறனை இழந்தும், மூட்டிணைப்புத் [[தசைநார்த் தேய்வு|தசைநார்கள்]] மிகவும் தளர்வுற்றும் காணப்படலாம்<ref name=NICE>{{cite web | last = Conaghan | first = Phillip | title = Osteoarthritis — National clinical guideline for care and management in adults | url=http://www.nice.org.uk/nicemedia/pdf/CG059FullGuideline.pdf |format=PDF| accessdate = 2008-04-29 }}</ref>.
 
[[உடற்பயிற்சி]], வாழும்முறை மாற்றங்கள், [[வலிநீக்கி|வலியகற்றிகள்]] ஆகியவை இணைந்தச் சிகிச்சை முறைகள் பொதுவாக உபயோகப்படுத்தப்படுகின்றது. வலியானது [[உடல்]] மெலிவிற்கு காரனமாகும்போதுகாரணமாகும்போது, வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த, மூட்டு மாற்றீட்டு சிகிச்சையை உபயோகப்படுத்தலாம். பொதுவாகக் காணப்படும் மூட்டழற்சி, முதுமை மூட்டழற்சியேயாகும்<ref name=NICE/>. இந்நோயே, அமெரிக்காவில் நாள்பட்ட [[ஊனம்|ஊனத்திற்கு]] முதன்மைக் காரணியாக விளங்குகின்றது<ref>{{cite journal |title=Prevalence of disabilities and associated health conditions among adults—United States, 1999 |journal=MMWR Morb Mortal Wkly Rep. |volume=50 |issue=7 |pages=120–5 |year=2001 |month=February |pmid=11393491 |author1= Centers for Disease Control and Prevention (CDC)}}</ref>,<ref>{{cite journal |title=Epidemiology of Osteoarthritis and Associated Comorbidities |journal=Physical Medicine and Rehabilitation |volume=4 |issue=5 Suppl |pages=S10-9 |year=2012 |month=|pmid=22632687 |author1= Division of PM&R, VA Boston Healthcare System-JP Campus, 150 S Huntington Ave, Boston, MA 02130, USA.}}</ref>. [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] எட்டு மில்லியன் [[மக்கள்|மக்களும்]]<ref>{{cite web | last = | first = | title = Osteoarthritis (OA)| url=http://www.arthritisresearchuk.org/arthritis-information/conditions/osteoarthritis.aspx| accessdate = 2012-12-01}}</ref>, [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவில்]] 21 மில்லியன் மக்களும்<ref>{{cite web | last = | first = | title = Arthritis Prevalence Rising as Baby Boomers Grow Older
Osteoarthritis Second Only to Chronic Heart Disease in Worksite Disability| url=http://www.nih.gov/news/pr/may98/niams-05.htm| accessdate = 2012-12-01}}</ref> முதுமை மூட்டழற்சியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
 
==அறிகுறிகள்==
[[File:Heberden-Arthrose.JPG|thumb|right| மூட்டு வீக்கம் அல்லது புடைப்பு முதுமை மூட்டழற்சியில் உருவாகலாம்]]
இந்நோயின் பிரதானமான அறிகுறியான வலியானது ஊனத்தையும், மூட்டு விறைப்பையும் உருவாக்கவல்லது. பொதுவாக வலியானது நோய் தாக்கப்பட்ட மூட்டுகளுடன் தொடர்புடைய தசைகளிலும், தசைநாண்களிலும் கூர்மையான வேதனையைத் தரக்கூடியதாகவும், தீப்புண் போன்ற எரிச்சல் தரக்கூடியதாகவும் உள்ளதாக விவரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட எலும்புப் பிணைப்பானது அசையும்போதோ, தொடும்போதோ சொடுக்கு (crepitus) போடுவது போன்ற படபடவென்ற சத்தத்தினை உருவாக்கக்கூடியது. நோயாளிகள் தசைப்பிடிப்பு, வலியேற்படுத்தும் தசைநாண்களின் சுருக்கம் ஆகியவற்றை அனுபவிக்க நேரிடலாம். எப்போதாகிலும், மூட்டுகள் [[மூட்டுறை திரவம்|மூட்டுறை திரவங்களினால்]] நிரப்பப்படலாம். ஈரத்தன்மைமிக்க, [[குளிர்காலம்|குளிரான]] [[பருவகாலங்கள்|பருவகாலங்களில்]] பல நோயாளிகளின் வலி மிகுந்துக் காணப்படும்<ref>{{cite journal | author = McAlindon T., Formica M., Schmid C.H., Fletcher J. | year = 2007 | title = Changes in barometric pressure and ambient temperature influence osteoarthritis pain | url = http://eclips.consult.com/eclips/article/Medicine/S0084-3873(08)79099-0 | journal = The American Journal of Medicine | volume = 120 | issue = 5| pages = 429–434 |pmid=17466654 | doi = 10.1016/j.amjmed.2006.07.036 }}</ref><ref>{{MedlinePlus|000423|Osteoarthritis}}</ref>.
 
==மேற்கோள்கள்==
20,936

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1269613" இருந்து மீள்விக்கப்பட்டது