ஆவிச்சி மெய்யப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 15:
1950கள் ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றியாண்டுகளாகத் திகழ்ந்தன. 1952 ஆம் ஆண்டில், ஏவிஎம் நிறுவனம் பராசக்தி (திரைப்படம்)[[பராசக்தி]] திரைப்படத்தை வெளியிட்டது. இத்திரைப்படம் சென்னை முழுவதும் வெளியாகி வெற்றித் திரைப்படமாகியது. [[மு. கருணாநிதி]]யால் எழுதப்பட்ட வசனங்கள் சமூகப் புரட்சியை ஏற்படுத்தின. புதியவரான [[சிவாஜி கணேசன்]] இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து சில ஆண்டுகளில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்கினார். ஏவிஎம் வெளியிட்ட [[அந்த நாள்]] என்ற திரைப்படத்திலும் நடித்தார். இத்திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை என்பதும் இவ்வகையில் இப்படம் இந்தியத் திரைப்படங்களிலேயே முதலாவது என்பதும் குறிப்பிடத்தக்கன. இதில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்போது]] ஊடுருவிய [[ஜப்பானியர்|யப்பானியருடன்]] சேர நினைக்கும் பொறியாளர் தன் மனைவியால் கொல்லப்படுகிறார். இக்கதை [[அகிரா குரோசவா]]வின் ''ரசோமோன்'' என்ற கதையினைப் போன்றே எடுக்கப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், ''சடகபாலா'' என்ற கன்னடத் திரைப்படத்தையும், அதன் தமிழ் மற்றும் தெலுங்குப் பதிப்புகளான ''சடகபாலம்'' என்ற திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டது. 1958 ஆம் ஆண்டில், தெலுங்கில் ''பூகைலாசு'' என்ற திரைப்படம் வெளியானது. இது தெலுங்குத் திரையுலகின் பொற்காலம் என்று வர்ணிக்கப்பட்டது. இதை ''பக்த ராவணா'' எனத் தமிழிலும், ''பக்தி மகிமா'' என இந்தியிலும் வெளியிட்டனர்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}}
[[பகுப்பு:1907 பிறப்புகள்]]
[[பகுப்பு:1979 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆவிச்சி_மெய்யப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது