பெருந் தடுப்புப் பவளத்திட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: eu:Koral Hesi Handia
No edit summary
வரிசை 13:
'''பெரும் தடுப்புப் பவளத்திட்டு''' (''The Great Barrier Reef'') உலகின் மிகப் பெரிய [[பவளப்பாறை]]த் திட்டுத் தொகுதியாகும். இது 2,900 தனித் திட்டுக்களையும், 2,600 [[கிமீ]] தூரம் நீண்டிருக்கும் 900 [[தீவு]]களையும் கொண்டு ஏறத்தாள 344,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்துள்ளது. இது வடகிழக்கு [[ஆஸ்திரேலியா]]வின் [[குயின்ஸ்லாந்து]] கரைக்கு அப்பால் [[பவளக் கடல்|பவளக் கடலில்]] (''Coral Sea'') அமைந்துள்ளது.
 
பெரும் தடுப்புப் பவளத்திட்டு, [[உயிரினம்|உயிரினங்களால்]] உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஒற்றை அமைப்பாகும். இதனை [[விண்வெளி]]யில் இருந்தும் பார்க்க முடியும். இந்தப் பவளத்திட்டு அமைப்பு பல கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களால் அமைக்கப்பட்டவை. [[உயிரியற் பல்வகைமை]]ப்பட்ட உயிரினங்களின் வாழ்விடமாக உள்ள பெரும் தடுப்புப் பவளத்திட்டு [[1981]] ஆம் ஆண்டில் [[யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாகத்]] தெரிவு செய்யப்பட்டுள்ளது. சி.என்.என் (CNN) எனப்படும் ஆங்கில மொழித் [[தொலைக்காட்சிச் சேவை]] இதனை உலகின் ஏழு [[இயற்கை]] அதிசயங்களில் ஒன்றாகத் தெரிவு செய்துள்ளது. குயீன்ஸ்லாந்தின் தேசிய நம்பிக்கை நிறுவனம் (Queensland National Trust) இதனை மாநிலத்தின் அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.
 
இப் பவளத்திட்டின் பெரும் பகுதி, [[பெரும் தடுப்புப் பவளத்திட்டுக் கடல்சார் பூங்கா]] திட்டத்தினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அளவுக்கதிகமான மீன்பிடித்தல், [[சுற்றுலாத்துறை|சுற்றுலா]] போன்ற மனித நடவடிக்கைகளால் இப் பவளத்திட்டு பாதிக்கப்படுவது குறைக்கப்படுகிறது. இப் பவளத்திட்டுக்களுக்கும், அதன் சூழ்நிலை மண்டலத்துக்கும் இருக்கக்கூடிய இன்னொரு தாக்கம், இப்பகுதியில் வந்து விழும் நீரின் தரம் ஆகும். அத்துடன், [[காலநிலை]] மாற்றங்களினால் ஏற்படும் பாரிய [[பவள வெளிறல்]], "[[முள்முடி நட்சத்திர மீன்]]களால்" ஏற்படும் தாக்கம் என்பனவும் குறிப்பிடத்தக்கவை.
"https://ta.wikipedia.org/wiki/பெருந்_தடுப்புப்_பவளத்திட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது