ஐ. கே. குஜரால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிவப்பு இணைப்புகள் சரிசெய்தல்
வரிசை 23:
 
==ஜனதா தளம்==
குஜ்ரால் 1980 களின் நடுவில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகி ஜனதா தளத்தில் இணைந்தார். 1989 தேர்தலில் ஜலந்தர் பாராளுமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [[வி. பி. சிங்|வி.பி.சிங்]] அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக பணி புரிந்தார். 1989 ம் ஆண்டு [[முப்தி முகமது சயத்|முப்தி முகமது சயது]]வின் மகள் ருபயா சயத் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்டவர்களுடன் பேசி ருபயாவை மீட்க [[வி. பி. சிங்|வி.பி.சிங்]] இவரை அனுப்பினார். [[குவைத்]] மீது [[ஈராக்]] படையெடுத்து ஆக்கிரமித்ததும் அதன் விளைவாக 1991ல் ஏற்பட்ட முதலாம் வளைகுடா போரும் இவர் வெளியுறவு துறை அமைச்சராக கையாண்ட பெரிய செயல். அச்சமயம் [[ஈராக்]] அதிபர் [[சதாம் உசேன்|சதாம் உசேனை]] நேராக சந்தித்து பேசினார். 1991 நடுவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் [[பாட்னா]] தொகுதியில் [[ஜனதா தளம் (எஸ்சமயச்சார்பற்ற)]] வேட்பாளர் [[யஷ்வந்யஷ்வந்த் சின்கா]]வை எதிர்த்து போட்டியிட்டார். எனினும் அதிக அளவு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்ததைத்தொடர்ந்து இத்தேர்தல் இரத்து செய்யப்பட்டது.
 
1992 ஆம் ஆண்டு குஜ்ரால் இந்தியாவின் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரிசை 35:
21 அக்டோபர் 1997 ல் உத்திரபிரதேச மாநில சட்டமன்றத்தில் [[கல்யாண் சிங்]] தலைமையிலான [[பாஜக]] அரசு மீதான நம்பிக்கை கோரும் வாக்கு நடைபெற்றது, அப்போது சபை மாண்பை குறைக்கும் செயல்களும் வன்முறைகளும் நிகழ்ந்தன, அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஆட்சியை செயல்படுத்த குஜ்ரால் அரசு குடியரசு தலைவரிடம் பரிந்துரைத்தது. எனினும் குடியரசு தலைவர் [[கே. ஆர். நாராயணன்]] அப்பரிந்துரையை ஏற்க மறுத்து மறுபரிசீலனைக்கு அரசுக்கு அனுப்பினார். [[அலகாபாத்]] உயர் நீதிமன்றமும் உத்திரபிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை செயல் படுத்த தடை விதித்தது.
 
1997 நவம்பர் மாத தொடக்கத்தில் [[இராஜிவ்இராஜீவ் காந்தி]] படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜெயின் கமிசனின் சில அறிக்கைகள் ஊடகங்களுக்கு கிடைத்தது. இராஜிவ் காந்தி படுகொலைக்கு காரணமாக கருதப்படும் விடுதலை புலிகளுக்கு [[திமுக]] ஆதரவு வழங்கி வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. திமுக ஐக்கிய முன்னனியில் ஒரு அங்கமாக இருந்ததுடன் அமைச்சரவையில் பங்கு பெற்றிருந்தது. காங்கிரஸ் ஜெயின் கமிசன் அறிக்கையை நாடாளுமன்ற அவையில் வெளியிடுமாறு கோரியதால் 1997 நவம்பர் 19 அன்று அரசு ஜெயின் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டது. இதில் திமுக வை விடுதலைப்புலிகள் அமைப்புடன் ஜெயின் கமிசன் தொடர்பு படுத்தி இருந்தது உறுதியாகியது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ், திமுக அமைச்சர்களை அரசைவிட்டு நீக்குமாறு வலியுறுத்தியது. காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரியும் பிரதமர் குஜ்ராலும் கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். எனினும் குஜ்ரால் காங்கிரஸின் இந்த நெருக்குதலை ஏற்கமறுத்து விட்டார். 1997 நவம்பர் 23 அன்று கல்கத்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வரலாம் என்று சூசகமாக தெரிவித்தார். 1997 நவம்பர் 28 காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து குஜ்ரால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மற்ற கட்சிகளால் மாற்று அரசு அமைக்க முடியாமல் போனதால் நாடாளுமன்றத்துக்கு [[இடைத்தேர்தல்]] அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை குஜ்ரால் இடைக்கால பிரதமராக நீடித்தார். இடைக்கால பிரதமராக இருந்த 3 மாதங்களையும் சேர்த்து குஜ்ரால் 11 மாதங்கள் பிரதமராக பதவியில் இருந்தார்.
 
1998 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் குஜ்ரால் பஞ்சாப் மாநிலத்தின் [[ஜலந்தர்]] தொகுதியில் [[அகாலி தளம்]] ஆதரவோடு போட்டியிட்டார். பிரதமராக இருந்தபொழுது 1980 மற்றும் 1990 தொடக்கத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கான செலவுகளை பஞ்சாப் அரசுடன் இந்திய நடுவண் அரசும் பகிர்ந்து கொள்ளும் என்று அறிவித்தார். இது பஞ்சாப் மீதான பொருளாதார அழுத்தத்தை பெருமளவு குறைத்தது. இதன் காரணமாக பாஜக கூட்டணியில் இருந்தபோதும் அகாலி தளம் குஜ்ராலை ஆதரித்தது. அத்தேர்தலில் குஜ்ரால் காங்கிரஸின் உம்ராவ் சிங்கை விட 131,000 வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/ஐ._கே._குஜரால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது