மூதின் முல்லை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
முன்னாட்களில் நடந்த போரில் தந்தையும் கணவனும், தன்னையரும் மாண்டு கல்லில் நின்றார்கள். அக்குடியில் வந்த மறத்தி தன் மகனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது பகைவரது படை வந்த்து எனப் பறை முழங்கியது. அது கேட்டுப் பொறாமல் தன் பிள்ளையின் வாயிலிருந்து முலையைப் பறித்தாள். எஃகம்(வாள்) ஒன்றின் வளைவைத் தானே நிமிர்த்தினாள். பிள்ளையின் கையில் கொடுத்தாள். தந்தை முதலியவர்களின் நடுகல்லைக் காண்பித்தாள். பின் தன் புதல்வனைப் போருக்குப் போ என விடுத்தாள். இதில் மூதில் மடவாளின் மறத்தின் மிகுதி கூறப்பட்டிருப்பதால் இது மூதின்முல்லை எனும் துறையாகும்.
==இலக்கியம்==
புறநானூற்றில் மூதின்முல்லை என்னும் துறைப் பாடல்கள் 2315 உள்ளன.
#முதல் நாள் போரில் அவள் தந்தை பகைவரின் யானையைக் கொன்று தானும் மாண்டுபோனான். இரண்டாம் நாள் போரில் அவள் கணவன் குதிரைகளைக் கொன்று முன்னேறுகையில் மாண்டுபோனான். மூன்றாம் நாள் போர்ப்பறை கேட்டவுடன் தன் ஒரே மகனுக்குப் போராடை அணிவித்துப் போருக்கு அனுப்புகிறாள். (இவள் சிந்தை கெடுக- என்கிறார் புலவர்) <ref>புறநானூறு 279,</ref>
#மகனைப் பெற்று வளர்த்தல் என் கடமை. அவனைச் சான்றோன் ஆக்குதல் தந்தை கடமை. அவனுக்கு வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லன் கடமை. அவனை நல்லவனாகவும் வீரனாகவும் ஆக்குதல் வேந்தன் கடமை. போர்க்களத்தில் களிற்றை வென்று மீளல் காளையாகிய என் மகன் கடமை. – தாய் சொல்கிறாள். <ref>புறநானூறு 312,</ref>
#நெஞ்சில் வேல் பாய்ந்து கிடந்தவனின் குருதியைக் கண்டு பருந்துகளும் அஞ்சின. <ref>புறநானூறு 288.</ref>
#தன் கணவன் பகை நாட்டைக் கைப்பற்றட்டும் என்று ஒருத்தி தன் முன்னோரின் நடுகல்லை வழிபட்டாள். <ref>புறநானூறு 306,</ref>
#அவன் பகையரசன் யானைமேல் வேல் வீசினான். பகையரசன் அவன் மார்பில் வேல் எறிந்தான். அவனோ அந்த வேலைப் பிடுங்கி ஓங்கினான். அது கண்ட பகையரசன் யானைகள் புறங்கொடுத்து ஓடின. <ref>புறநானூறு 308,</ref>
#அவளுக்குப் பாணர்க்கு விருந்தோம்புதலில் வேட்கை. அவனுக்கோ பகைவனின் பட்டத்துயானையைக் கொன்று அதன் நெற்றியணிகலனாகிய ஓடையைத் தன் அரசனிடமிருந்து பரிசாகப் பெறும் வேட்கை. <ref>புறநானூறு 326,</ref>
#மாடு கட்டிப் பிணையல் அடிக்காமல் தானே காலால் துவட்டி எடுத்த வரகைக் கொடுக்கவேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டுத் தான் பிறரிடம் இரக்கும் வறுமையாளன்தான் என்றாலும், பகையரசன் வந்தால் தான் ஒருவனாகவே தாங்கும் வலிமை உடையவன் அவன். <ref>புறநானூறு 327,</ref>
#அவன் ஊர் நெல் விளையாத புன்புலம். தன் வயலில் விளைந்த வரகு, தினை ஆகியவற்றையெல்லாம் அவன் இரவலர்களுக்கே வழங்குவான். <ref>புறநானூறு 328,</ref>
#தன்னைப் பேணுவோரின் துன்பத்தை எண்ணிப் பார்க்காமல், தன்னிடமுள்ள அனைத்தையும் இரவலர்க்கு ஈயும் பண்பினன் அவன். <ref>புறநானூறு 329,</ref>
#கடலுக்குக் கடற்கரை ஆழி. படைக்கடல் அலைக்கும் இவன் ஒருவனே ஆழி போன்றவன். அத்துடன் பாடிச் சென்றோரை மட்டுமல்லாமல் எல்லாரையும் கட்டிக்காக்கும் வள்ளல் அவன். <ref>புறநானூறு 330,</ref>
#அரசன் [[பெருஞ்சோற்று நிலை|பெருஞ்சோறு]] வழங்குவது போலப் பந்தல் போட்டு உணவு வழங்குவதில் அவள் [[ஞெகிழி|சிறுதீ ஞெலி]] போன்வள். <ref>புறநானூறு 331,</ref>
#அவன் வேல் மற்றவரின் வேல் போன்றது அன்று. கூரை இறவானத்தில் செருகப்பட்டுக் கிடந்தாலும் கிடக்கும். மங்கல மகளிர் சூட்டிய மாலையுடன் அவர்களின் யாழிசையுடன் நீராடச் செல்லினும் செல்லும். பகை வேந்தர் பட்டத்துயானை முகத்தில் பாயினும் பாயும். <ref>புறநானூறு 332,</ref>
#அவள் விதைத் தினையையும் குற்றி விருந்து படைப்பாள். <ref>புறநானூறு 333,</ref>
#அவள் முற்றத்தில் விளையாடும் முயலுக்கும் உணவிடுவாள். பாணர்க்கும் விருந்தளிப்பாள். அவன் பரிசிலர்க்கு வேண்டியவை அனைத்தும் கொடுப்பான். <ref>புறநானூறு 334,</ref>
#போர்களத்தில் களிறு எறிந்து பட்ட வீரனுக்கு நடப்பட்ட கல்லைத் தவிர நெல் தூவி வணங்கும் வேறு கடவுள் இல்லவே இல்லை. <ref>புறநானூறு 335</ref>
 
== உசாத்துணை ==
தா. ம. வெள்ளைவாரணம், புறப்பொருள்வெண்பாமாலை, திருப்பனந்தாள் மட வெளியீடு.1967.
"https://ta.wikipedia.org/wiki/மூதின்_முல்லை" இலிருந்து மீள்விக்கப்பட்டது