"தி இந்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

59 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==வரலாறு==
 
இந்து செய்தித்தாள் முதன் முதலாக செப்டம்பர் 20, 1878 இல் வெளியானது. [[சென்னை உயர் நீதிமன்றம்|சென்னை உயர்நீதிமன்றத்திற்கு]] முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோபமடைந்த [[திருவல்லிக்கேணி]] இலக்கிய வட்டத்தை சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். [[ஜி. சுப்பிரமணிய ஐயர்|ஜி. சுப்ரமணிய ஐயரை]] ஆசிரியராகக் கொண்டு ''தி இந்து'' என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது.<ref name=WillingToStrike>{{cite web| author=S. Muthiah | url=http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091300770200.htm&date=2003/09/13/&prd=th125& | title=Willing to strike and not reluctant to wound | date=13 September 2003 | accessdate=2006-04-25}}</ref>
 
1887 இல் [[சென்னை|சென்னையில்]] [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள். தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் [[அன்னி பெசண்ட்|அன்னி பெசன்ட்]] அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. [[நீதிக்கட்சி|நீதிக்கட்சியின்]] தலைவர்கள் [[டி. எம் . நாயர்]], [[தியாகராய செட்டி]] ஆகியோர், [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டமன்றத்தில்]] வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது [[இந்து]] அதை கடுமையாக எதிர்த்தது. [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர போராட்டத்திற்கு]] ஆதரவாகவும் [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் அரசுக்கு]] எதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது. 1987 இல் [[போபர்ஸ்|போஃபோர்ஸ்]] பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியது. 1995 முதல் [[ இணையம்|இணையத்திலும்]] வெளிவரத் துவங்கியது. 1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 – 2001 இல் என். ரவியும் இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் [[நரசிம்மன் ராம்|என். ராம்]] இந்துவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை ஆசிரியராகவும் இருக்கின்றார்.<ref name=nm_bg>{{cite web | author=N. Murali | url=http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2003091301020800.htm&date=2003/09/13/&prd=th125& | title=Core values and high quality standards | work=The Hindu | date=13 September 2003 | accessdate=2006-04-20}}</ref>
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1272132" இருந்து மீள்விக்கப்பட்டது