கினபாலு மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 57:
கியாவ் கிராமத்திற்கு அருகாமையில் புண்டு தகான் எனும் கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் இருந்தவர்கள்தான் பெரும்பாலான வழிகாட்டிகளையும் சுமை
தூக்குபவர்களையும் வழங்கினார்கள். புண்டு தகான் கிராமத்தில் குந்திங் லகாடான் எனும் இளைஞர் இருந்தார். அவர்தான் கினபாலு மலை ஏறிய முதல் பூர்வீக வழிகாட்டி ஆகும். பிரித்தானிய தாவரவியலாளர் லிலியன் கிப்ஸ் என்பவர்தான் கினபாலு மலை உச்சியை அடைந்த முதல் பெண்மணி ஆகும். 1910 பிப்ரவரி மாதம் அந்தச் சாதனையைச் செய்தார்.
 
 
கினபாலு மலையின் இயற்கை மகத்துவத்தை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்த பெருமை லிலியன் கிப்ஸ் எனும் பெண்மணியையே சாரும். இவர் ஒரு தாவரவியலாளர். கினபாலு மலைச் சாரலில் கிடைத்த தாவரங்களைச் சேகரித்தார். அவற்றை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். இங்கிலாந்து தாவர அரசக் கழகம் அந்தத் தாவரங்களின் அரியத் தன்மைகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. 1964 ஆம் ஆண்டு கினபாலு மலை மலேசிய அரசாங்கத்தின் அரசிதழ்ப் பதிவைப் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/கினபாலு_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது